டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜில் ஜில் சூரியன்.. சிலீர் பூமி.. உறைய வைத்த புளோரன்ஸ்.. மறக்க முடியாத 2018 ஸ்பேஸ் படங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 2018ம் ஆண்டு பூமியில் மட்டுமல்ல பூமிக்கும் மேலும் கூட பல மறக்க முடியாத நிகழ்வுகளை நமக்கு காட்டி விட்டுச் செல்கிறது.

பூமிக்கும் அப்பால் உயிர்கள் இருக்கிறதா என்ற ஆய்வுகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் விண்வெளியிலும் விண்ணிலிருந்து மண்ணிலும் நிகழும் மாயாஜாலங்களை நமக்களித்து விருந்து படைத்து வருகிறது அமெரிக்காவின் நாசா.

நாசா 2018ம் ஆண்டு எடுத்த அட்டகாசமான சில விண்வெளிப் படங்கள் உங்கள் பார்வைக்கு. மறக்க முடியாத சம்பவங்களின் மிரட்டல் படங்கள் குறித்த ஒரு ரீவைண்ட்:

இதுதான் ப்ளூட்டோ

இதுதான் ப்ளூட்டோ

ப்ளூட்டோ கிரகம் குறித்த புத்தம் புதிய அருமையான படங்களை முதல் முறையாக பூமி பார்த்து ரசித்தது. ஜூனோ விண்கலம் அனுப்பிய படம் இது. பார்க்கவே பிரமாண்டமாக, பிரமிப்பாக இருந்தன ஜூனோ அனுப்பிய ப்ளூட்டோ படங்கள்.

மலைக்க வைத்த மண் மேடுகள்

மலைக்க வைத்த மண் மேடுகள்

இது செவ்வாய் கிரகத்தின் விர்ட்ஸ் மலைச் சிகரத்தில் காணப்படும் மண் மேடுகள். மேலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அருமையான காட்சி இது.

மண் மேடு.. குளோசப் பார்வை

மண் மேடு.. குளோசப் பார்வை

இது செவ்வாய் கிரகத்தின் மண் மேடுகளின் குளோசப் காட்சி. படு வித்தியாசமான கண்ணுக்கு விருந்தளிக்கும் புகைப்படம் இது.

கஜாவும் இப்படித்தானோ

கஜாவும் இப்படித்தானோ

2018ம் ஆண்டின் மறக்க முடியாத ஸ்பேஸ் படம் இது. அமெரிக்காவை உலுக்கி எடுத்த புளோரன்ஸ் புயலை சர்வதச விண்வெளி நிலையத்திலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்பியது நாசா. கஜாவும் நம்மை இப்படித்தான் சுழற்றியடித்திருக்குமோ!

மடகாஸ்கர்

மடகாஸ்கர்

இது மடகாஸ்கர். பார்க்க மாடர்ன் ஆர்ட் போல காணப்படும் ரம்மியமான காட்சி. பூமி அழகுதான்.. அழகிதான்!

கூல் சூரியன்

கூல் சூரியன்

பார்க்க ஜெல்லி மிட்டாய் போலக் காணப்படும் இதுதாங்க சூரியன். சுட்டெரிக்கும் சூரியனை இப்படி ஒரு கோணத்தில் நமக்குக் காட்டிய நாசாவுக்கு ஒரு சூரிய நமஸ்காரம் வைத்தாலும் தகும்தான்.

English summary
Here the images of Nasa, which shows The Sun in Solar Dynamics Observatory and also Hurricane Florence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X