விமான எரிபொருள் கட்டணம் அதிரடியாக உயர்வு.. டிக்கெட் ரேட் உயர வாய்ப்பு! பயணிகளுக்கு அதிர்ச்சி
டெல்லி: விமான எரிபொருள் கட்டணத்தை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எரிபொருள் கட்டண உயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட டிக்கெட் கட்டணம் உயர்த்தபட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அடிக்கடி விமான பயணம் செய்பவர்களுக்கு இனி கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
விமானனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் கட்டணம் மீண்டும் விலையேற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த மாதம் ரூ.2,941 உயர்த்தப்பட்டு இருந்தது. அதாவது, 3.3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதம் ரூ.1,318 ஒரு கிலோ லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. விலையேற்றத்திற்கு பிறகு ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் (ATF) ரூ.91,856.84 ஆக டெல்லியில் உள்ளது.

கொல்கத்தாவில் ரூ.85,861.02 மற்றும் மும்பை மற்றும் சென்னையில் ரூ.95,231.49 - ஆக உள்ளது. இந்த மாற்றப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விமான எரிபொருள் கட்டண உயர்வு விமான நிறுவனங்களுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. விமான நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்க இனி செலவு அதிகம் தேவைப்படும் என்பதால், பயணிகள் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
விமான எரிபொருள் கட்டணங்களை பொறுத்தவரை அரசு எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை விற்பனை செய்கின்றன. மாதத்தின் முதல் நாளில் விமான எரிபொருள் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று வெளியான புதிய விலைப்பட்டியலில் விமான எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலை குறைக்கப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது, டிசம்பர் மாதத்திலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் கட்டணங்களை போல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் மாதம் தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியான அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது மாதமாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ஒரு சிலிண்டருக்கு ரூ.16.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி ஒரு வணிக சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ. 1818.50 ஆகவும், டெல்லியில் ரூ.1771 ஆகவும், மும்பையில் ரூ.1927 ஆகவும், சென்னையில் 1980 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடந்து அதிகரித்து வருகிறது. இந்த ஐந்து மாதத்தில் மட்டும் வணிக சிலிண்டர் விலை ரூ.172.5 உயர்ந்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி ரூ.818.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வர்த்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஹோட்டல்கள், டீக்கடைகளில் உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம் இருப்பதாக மக்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications