இன்று மத்திய பட்ஜெட் 2021 தாக்கல்: முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் நடைமுறை
டெல்லி: 2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் இன்று தாக்கல் செய்கிறார்.
Recommended Video
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டுமான திட்டங்கள் முற்றிலும் முடங்கியது.

இது போல் அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத் துறைக்கு ஏதேனும் சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது போல் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டால் நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு தொடங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை அமலுக்கு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட் அறிக்கையை மடிக்கணினி உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து பார்க்கும்வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறு, குறு தொழில்கள் மற்றும் வேளாண்துறைக்கு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications