செல்போன் விலை சர்ருன்னு குறையுது.. மொபைல் போன், சார்ஜர்களுக்கு வரியை குறைத்து பட்ஜெட்டில் அறிவிப்பு!
டெல்லி: செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15% ஆக குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். இதன் மூலம், செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரை ஆற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரி சலுகைகளையும் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். செல்போன், சார்ஜர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்புடன், இந்திய மொபைல் துறை முதிர்ச்சியடைந்துள்ளது. நுகர்வோர் நலன் கருதி, இப்போது அடிப்படை சுங்க வரியை குறைக்க முன்மொழிகிறேன். மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான சுங்க வரி 15% ஆக குறைக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் துறையில் மதிப்பு கூட்டலை அதிகரிக்க, மின் தேக்கிகளை தயாரிப்பதற்காக ஆக்ஸிஜன் இல்லாத தாமிரத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு BCD ஐ அகற்ற நான் முன்மொழிகிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
செல்போன், சார்ஜர்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கு சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதன் காரணமாக, இனி செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, செல்போன் பிரியர்கள், கேட்ஜெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. செல்போன், சார்ஜர்கள் விலை குறைவால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில். தங்கம், வெள்ளி நகைகளின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications