உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? இந்த சின்ன விஷயத்தை மாற்றினாலே போதும்.. ஈஸியாக கட்டுப்படுத்தலாம்
டெல்லி: சர்க்கரை பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாறி வரும் உணவு முறை காரணமாக, மனிதர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உலகெங்கும் பல கோடி மக்கள் சர்க்கரை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
நீரிழிவு பாதிப்பைப் பலரும் பல்வேறு முறைகளில் கட்டுக்குள் வைத்து இருக்க முயல்கின்றனர். இது தொடர்பாக உலகெங்கும் ஆய்வுகளும் நடந்து வருகிறது.

உணவு முறை
இந்நிலையில், உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிதாக நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்கள் தங்கள் தினசரி உணவில் வெள்ளை அரிசி அல்லது சுத்திகரிக்கப்பட்ட கோதுமையைக் குறைத்து, பருப்பு மற்றும் முட்டைகளை அதிகரிப்பதன் மூலம், சர்க்கரை பாதிப்பைக் குறைக்கலாம். மருந்துகளும் கூட எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு
இது தொடர்பாக 18,090 சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது. அதில் கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்தை 54%ஆகக் குறைத்து, புரதத்தை 20% உயர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. மேலும், தேவையான கொழுப்பை 20%ஆக வைத்திருந்தால் நீரிழிவு பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். இந்த உணவு முறை புதிதாக நீரிழிவு பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்குப் பெரியளவில் உதவும் எனக் கூறப்பட்டு உள்ளது.

உணவு முறை
இந்த உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உடலின் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு குறைந்தது 3 மாதங்களுக்கு மருந்து இல்லாமல் 6.5%க்கும் குறைவாக இருக்கிறது. இதற்கு உணவு முறை பெரியளவில் உதவுகிறது. சர்க்கரை அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவு 5.6%க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

குறையாது
இது தொடர்பாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், "நீரிழிவு நோயாளிகள் மற்றும் ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகளில் சுமார் 80% பேருக்கும் உணவு முறைகளை மாற்றுவது மூலமே இதை நம்மால் அடைய முயல்கிறது. இந்தியாவில் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் குறைக்க முடியாது என்பதால் ஓரளவு கட்டுக்குள் வைத்தாலே போதும்" என்றார்.

ஆய்வு முடிவுகள்
புதிதாகக் கண்டறியப்பட்ட 1,594 நீரிழிவு நோயாளிகள், 7,336 ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகள் உட்பட 18,090 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தான் உணவு முறைகளை மாற்றுவதன் மூலம் டைப் 2 நீரிழிவு பாதிப்பை ஓரளவு குறைக்க முடியும். ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகள் உடலில் இருக்கும் குளுக்கோஸ் லெவல் பெருமளவு குறைவதும் இதில் தெரிய வந்துள்ளது.

எந்தளவு
நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் கார்போஹைட்ரேட்டை 49%-54% வரையும் புரதத்தை 19%-20% வரையும் கொழுப்பை 21%-26% வரையும் வைத்திருக்க வேண்டும். அதேபோல ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகள் தினசரி உணவில் கார்போஹைட்ரேட்டை 50-56% வரையும் புரதத்தை 18%-20% வரையும் கொழுப்பை 21%-27% வரையும் வைத்திருக்க வேண்டும். புதிதாக நீரிழிவு பாதிப்பு உறுதியானவர்களில் சுமார் 78% பேரின் சர்க்கரை அளவை உணவு முறை மாற்றுவதன் மூலம் குறைக்க முடியும் என்பதும் அதில் தெரிய வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications