Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள்.. முகேஷ் அம்பானி முதலிடம்.. அசர வைத்த ஏர்டெல் ஓனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சொத்தின் நிகர மதிப்பில் 12 சதவீதம் சரிவினை சந்தித்த போதிலும் முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார். அவர் 105 பில்லியன் டாலர் சொத்துக்களுடன்,முதலிடத்தில் இருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9.32 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி டாப்பில் இருககிறார். கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

உலகப்பணக்காரர்கள் டாப் 100 பேர் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும், அதேபோல் இந்தியாவில் 100 பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலையும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இந்த பட்டியலில் ஏற்கனவே உள்ள கோடீஸ்வரர்கள், பில்லியனர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. அதேபோல் சிலர் புதிய பட்டியலில் இணைவதும் நடக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

Forbes India s Top 100 Richest People List Mukesh Ambani Gautam Adani Sunil Bharti Mittal s assets


முகேஷ் அம்பானி முதலிடம்

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2025 ஆம் ஆண்டுக்கான 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சொத்தின் நிகர மதிப்பில் 12 சதவீதம் சரிவினை சந்தித்த போதிலும் முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக தொடர்கிறார். அவர் 105 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9.32 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி டாப்பில் இருககிறார்.

கௌதம் அதானி இரண்டாம் இடம்

அவருக்கு அடுத்தபடியாக கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 92 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.17 லட்சம் கோடி சொத்துடன் இந்தியாவின் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில், ஓ.பி. ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் $40.2 பில்லியன் நிகர மதிப்புடன் இருக்கிறார். கடந்த ஆண்டைவிட சவித்ரி ஜிண்டால் சொத்து மதிப்பு $3.5 பில்லியன் குறைந்திருந்தாலும், இவர் தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்ணாக இன்றும் தொடர்கிறார். சவித்ரி ஜிண்டால் சொத்து மதிப்பு இன்றைய தேதியில் இந்திய ரூபாயின் பார்த்தால், ரூ. 3.57 லட்சம் கோடி ஆகும்.


ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் அசுர வளர்ச்சி

அடுத்ததாக நான்காவது இடத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் தொலைத்தொடர்பு அதிபரான சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருந்தார்கள். ஆனால் $34.2 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அதிகம் சொத்து சம்பாதித்தர் சுனில் மிட்டல் தான். இந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு $3.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் $3.5 பில்லியன் சொத்துடன் இருந்தார். ஆனால் இப்போது 34.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து இருக்கிறார். சுனில் மிட்டல் இந்திய மதிப்பில் ரூ. 3.04 லட்சம் கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

ஷிவ் நாடார் சொத்து மதிப்பு, டிமார்ட் ஓனர் சொத்து மதிப்பு

ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனர் ஷிவ் நாடார், 33.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு இடம் பின்தங்கியிருக்கிறார். அடுத்ததாக இந்தியா முழுவதும் டிமார்ட் நிறுவனத்தை நடத்திய வரும் ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பத்தினர் $28.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள்.

பஜாஜ் குடும்ப சொத்து மதிப்பு

சன்பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தும் திலீப் சங்வி மற்றும் குடும்பத்தினர் 26.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளனர். பஜாஜ் குடும்பத்தினர், 21.8 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஒட்டுமொத்த சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவாலா, 21.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் குமார் பிர்லா, 20.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.இந்துஜா குடும்பம் 20.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உடன் பதினொன்றாவது இடத்தில் உள்ளது.

பட்டியலில் இணைந்த புதிய கோடீஸ்வரர்கள் யார்

போர்ப்ஸ் வெளியிட்ட இந்த பட்டியலில் தோஷி சகோதரர்கள் புதியவர்கள் ஆவர. இந்தியாவின் மிகப்பெரிய சோலார் பேனல் உற்பத்தியாளரான வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் மூலம் இவர்கள் 7.5 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், இந்தியாவின் 37வது பெரிய பணக்காரர் என்ற பெருமையுடன் முதல்முறையாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

சுனில் வாசனி

மற்றொரு புதிய நபர் யார் என்றால், சாம்சங் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களுக்காக மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் டிக்ஸன் டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் வாசனி ஆவார். இவர் 3.85 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 80வது இடத்தில் இருக்கிறார்.

கேபி ராமசாமி

USV-இன் லீனா திவாரி 3.8 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உடன் 82வது இடத்தில் இருக்கிறார். சோபா-வின் பி.என்.சி. மேனன் 3.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 87வது இடத்தில் இருக்கிறார். கோவை கருமத்தம்பட்டியில் கேபிஆர் மில் நிறுவனத்தை நடத்தும் கே.பி. ராமசாமி 3.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 97வது இடத்தில் இருக்கிறார்.


சொத்து மதிப்பு சரிவு

அதேநேரம், கடந்த ஆண்டு பட்டியலில் இருந்த ஏழு நபர்கள் இந்த ஆண்டு 100 டாப் பணக்கார்கள்பட்டியலில் இல்லை. அதேநேரம் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கத் தேவையான குறைந்தபட்ச நிகர சொத்து மதிப்பு 2024-இல் $3.3 பில்லியன் ஆக இருந்தது. ஆனால் அது இந்த ஆண்டு $3.2 பில்லியனாக குறைந்துள்ளது.

டாப் 100 பணக்கார்களின் சொத்து மதிப்பு 88.80 லட்சம் கோடி

ஒட்டுமொத்தமாக ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 2025 ஆம் ஆண்டில் 9% சரிந்துள்ளது. அதாவது $100 பில்லியன் குறைந்து - ஒட்டுமொத்தமாக அவர்களின்சொத்து மதிப்பு $1 டிரில்லியனாக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 88.80 லட்சம் கோடி ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+