'அவர் கொள்கை பிடிச்சிருக்கு..' பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் தோனி தலைமையிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். அந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடாமல் இருந்த இவர், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடிக் கொண்டு இருந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணியில் இருந்து பாதியில் வெளியேறினார். தற்போது இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார்.

பாஜக கட்சி
பாஜக அணியில் தற்போது தொடர்ச்சியாக பிறக்கட்சியை சேர்ந்த நபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள். முக்கியமாக சினிமா மற்றும் விளையாட்டு அணிகளை சேர்ந்த பிரபலங்கள் கட்சியில் இணைகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கவுதம் கம்பீர் பாஜக கட்சியில் இணைந்து இருக்கிறார்.

போட்டி வாய்ப்பு
இவருக்கு தேர்தலிலும் வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இவர் லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

என்ன சொன்னார்
பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருக்கிறார். பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரம் செய்வார்
லோக்சபா தேர்தலில் இவர் கண்டிப்பாக பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இவரைப் போலவே பாஜகவில் கிரிக்கெட் வீரர் சேவாக் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் சேவாக் அந்த செய்திகளை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications