கபில்தேவ், கவாஸ்கர் களமிறங்கிட்டாங்களே.. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு அதிரடி ஆதரவு
டெல்லி: பாஜக எம்பிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியை சேர்ந்த கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் நிலையில், சில பயிற்ச்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் விரும்பினால் வேறு இடத்தில் அனுமதியளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.
இது போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியது. இதனையடுத்து பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர்.
அதன்படி கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினர், வீரர்களின் பிரச்னையை தீர்க்க தாங்களும் போராட்டம் நடத்துவதாகவும், எனவே பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் எனவும் கூறி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். அதேபோல, சர்வதேச மல்யுத்த அமைப்பு மற்றும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தன.
இவர்களைத் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் சக விளையாட்டு வீரர்களும் இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து தற்போது 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியை சேர்ந்த கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். அதில், "எங்கள் மல்யுத்த சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதை கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
அவர்கள் கடின உழைப்பால் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறியும் நிலைக்கு தளப்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த பதக்கங்களுக்கு பின்னால் பல வருட உழைப்பு, தியாகம், முயற்சி இருக்கிறது. இதுதவிர இந்த பதக்கங்கள் தேசத்தின் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்று நாங்கள் மல்யுத்த வீரர்களை கேட்டுக்கொள்கிறோம். மட்டுமல்லாது இவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவாக தீர்க்கப்படும் என்றும் நம்புகிறோம். சட்டம் வெல்லட்டும்" என்று கூறியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications