மறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்
Recommended Video
டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் இன்று காலமானார்.
இருதய கோளாறு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷீலா தீட்சித் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு வயது 81.

ஷீலா தீட்சித் மரணம் குறித்து தகவல் தெரிவித்துள்ள எஸ்கார்ட்ஸ் ஃபோர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அசோக் சேத், எங்களது மருத்துவர்கள் குழு ஷீலா தீட்சித் அவர்களை சிறப்பாக கவனித்து கொண்டது.
இருப்பினும் பிற்பகல் 3:15 மணியளவில் அவர் மீண்டும் இருதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி சரியாக பிற்பகல் 3:55 மணிக்கு அவர் உயிர் அமைதியாக பிரிந்தது என குறிப்பிட்டார்.
டெல்லி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர 2014-ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார் மறைந்த ஷீலா தீட்சித். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஷீலா தீட்சித் தோல்வியை தழுவியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications