எம்பி “செக்ஸ்” டார்ச்சர்.. பாஜக மீது பாய்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் - ஆவேச பேச்சு! இவரா?
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்து உள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி இந்திய மல்யுத்த சம்மேளனமான WFI யின் தலைவராக மூன்றாவது முறையாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்தனர். அப்போதே இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக எம்பி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இவர்கள் வலியுறுத்திய நிலையில், இது குறித்து மேரி கோம் தலைமையில் விசாரணை குழு ஒன்றை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அமைத்தது. தொடக்கத்தில் இந்த குழு மீது வீரர்கள் நம்பிக்கை வைத்து போராட்டத்தை நிறுத்திய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் வீரர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான மனோஜ் திவாரி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். "இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை அழித்து வருகிறோம் என்று பாஜக அரசு மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்திருக்கும் புகார்கள் அவமானகரமானவை. விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கருதி புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இது இந்தியாவின் பெருமையாக விளங்கும் பெண்களை பாதுகாக்கும் விசயம்.

இந்தியாவின் மூத்த மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் மற்றும் பலர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தையும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கையும் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த முறை போராட்டம் நடத்தியபோது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மல்யுத்த வீரர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபாதையில் இரவு முழுவதும் படுத்துக் கிடக்கின்றனர்.
It bleeds me when I see the brightest athletes of our country 🇮🇳 pleads justice on the streets. They all are the pride of our nation and we all should come forward to fight together in this. Jai Hind! We want justice… ✊🇮🇳🤼♀️#WrestlersProtest | #JantarMantar |… pic.twitter.com/EuRCd5wOgM
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 28, 2023
ஒட்டுமொத்த நாடும் இணைந்து நெருக்கடியான சூழலில் இருந்து வரும் நமது பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒரு விளையாட்டு வீரனாக நான் கேட்டுக்கொள்கிறேன். இது தற்போது தேசிய பிரச்சனையாகிவிட்டது. நமது பெண்களின் பாதுகாப்புதான் முதன்மையாக இருக்க வேண்டும். பாஜக அரசாங்கம் எப்படி நமது நாட்டில் நிலவும் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வு கையாள்கிறது என்பதை இந்த விசயம் எடுத்துக்காட்டுகிறது. வெட்கம்." என்று தெரிவித்து இருக்கிறார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஐபிஎலில் டெல்லி, கொல்கத்தா, புனே, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 95 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications