Satya Pal Malik demise: காஷ்மீர் மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!
டெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) காலமானார். நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சத்யபால் மாலிக், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று மதியம் 1 மணியளவில் காலமானார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் (79), நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். அவரது பதவிக்காலத்தில்தான், 2019 ஆகஸ்ட் 5ம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இன்று இந்த முடிவின் ஆறாவது ஆண்டு நிறைவு தினமாகும்.
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து, அவர் கோவாவின் 18வது ஆளுநராகவும், பின்னர் அக்டோபர் 2022 வரை மேகாலயாவின் 21வது ஆளுநராகவும் பதவி வகித்தார். இருப்பினும், அதன் பிறகு உடல்நிலை பாதிப்புகளால் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று காலமானார்.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு.. விஸ்வரூபம் எடுக்க போகும் தங்கம்.. சீக்கிரமே எல்லாம் மாறும் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications