முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது,
இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வல்லுநர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா 2ஆம் அலையின்போது, மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது சுமார் 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பினார்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள காங்கிரஸ் மன்மோகன் சிங் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அகில் இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பிரணவ் ஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து உண்மைக்குப் புறம்பாக பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. வழக்கமான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்படும்பட்சத்தில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications