Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சு வலி.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக காண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Recommended Video

    Manmohan Singh Admitted To Delhi's AIIMS

    87 வயதாகும் முன்னாள் மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    former-pm-manmohan-singh-admitted-to-delhi-aiims-hospital-for-chest-pain

    இருதய வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலையை மூத்த மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவு) இல் சேர்க்கப்படவில்லை. எய்ம்ஸ் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் நிதீஷ் நாயக் தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அவருக்கு எல்லாம் தற்போது நன்றாக உள்ளன, எய்ம்ஸில் கண்காணிப்பில் இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. அவர் லேசான வழி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்துள்ளார். 90களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டார்,

    முன்னாள் பிரதமருக்கும் இதற்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். . அவர் 2009 ஆம் ஆண்டில் எய்ம்ஸில் இதய-பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மே 2008 இல், அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, செப்டம்பர், 2007 இல், அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் நலம் விசாரித்து வருகிறார்கள். அவர் மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+