Delhi Car Blast: செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம்.. ஆக்கிரமிப்பு காஷ்மீர் முன்னாள் பிரதமர் ஆணவ பேச்சு
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிரதமராக இருந்த சவுத்ரி அன்வருல் ஹாக், இந்த கார் குண்டு வெடிப்பை தனது ஷாகின்கள் தான் நடத்தியதாக சவுத்ரி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த கார் குண்டு தாக்குதலை நடத்தியது டெல்லி அருகே பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்த உமர் முகமது நபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மிகப்பெரிய நாசவேலை
இந்த தாக்குதலுக்கு முன்பாக காஷ்மீர் போலீசார் அந்த மாநிலத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எச்சரிக்கை பற்றி நடத்திய விசாரணையை தொடர்ந்து பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் முஸாமில், ஷாகின் ஆகிய இருவரையும் கைது செய்து இருந்தனர்.
டாக்டர் உமர் தற்கொலை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த டாக்டர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலை நடத்த திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர் உமர் பணியாற்றி வந்த பரிதாபாத் பல்கலைக்கழகமும் விசாரணை வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரத்தம் சிந்த வைத்தால்..
இதற்கிடையே, டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிரதமராக இருந்த சவுத்ரி அன்வருல் ஹாக் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் குண்டு வெடிப்பை தனது ஷாகின்கள் தான் நடத்தியதாக சவுத்ரி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை நம்பிக்கையில்லாத வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், தனது பிரதமர் பதவியை பறிகொடுத்த அன்வருல் ஹாக், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இப்படி பேசியுள்ளார். அன்வருல் ஹாக் கூறுகையில், "பலோசிஸ்தானை நீங்கள் (இந்தியா) தொடர்ந்து ரத்தம் சிந்த வைத்தால், செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம்.
இது முதல் முறையல்ல
எங்கள் ஷாகின்கள் அதை செய்தனர். அவர்களால் இன்னும் உடல்களை எண்ணி முடிக்க முடியவில்லை" என்றார். இந்தியாவுக்கு எதிராக அன்வருல் ஹாக் இவ்வாறு பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம், அன்வாருல் ஹக் இந்தியாவுக்கு எதிராக விஷம கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications