விவசாயிகள் போராட்டம்.. ட்விட்டர் தடை செய்யப்படும்.. இந்திய அரசு மிரட்டியதாக ஜேக் டோர்சி பகீர் புகார்
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அதை இருட்டடிப்பு செய்யுமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி தெரிவித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது.

விவசாயிகளுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டக் களத்திலேயே சமைத்து சாப்பிட்டனர். வாஷிங்மெஷின்கள் மூலம் துணிகளை துவைத்து போராட்டத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். விவசாயிகளின் நலனுக்காகவே அந்த 3 சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் அவர்களே வேண்டாம் என சொல்லும் போது எதற்காக அந்த சட்டம் என கேட்டு அதை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் ஓராண்டுக்கு பின்னர் ஊர் போய் சேர்ந்தனர். இந்த போராட்டத்தை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தாலும் ட்விட்டரில் இந்திய அரசுக்கு எதிராக பல பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்ததால் அவர்களது ட்வீட்டுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தை டிவிட்டரில் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை விமர்சித்து பத்திரிகையாளர்கள் போடும் ட்வீட்களையும் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசால் நாங்கள் மிரட்டப்பட்டோம்.
இந்தியாவில் ட்விட்டர் தடை செய்யப்படும். டிவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என மிரட்டினார்கள், சிலரது வீடுகளில் ரெய்டும் நடந்தது. அவர்கள் சொன்னதை நாங்கள் செய்தோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என கூறிவிட்டு டோர்சி சிரிக்கிறார். ஜேக் டோர்சி 16 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓ வாக இருந்து வந்தார்.
"Indian govt told Twitter to black out farmers protests&tweets by journalists critical of the govt. Threatened to shut Twitter down in India&raid the homes of Twitter employees, which they did. And India is supposed to be a democratic country!": Jack Dorsey, former CEO of Twitter pic.twitter.com/UDaBw92GBq
— Prashant Bhushan (@pbhushan1) June 12, 2023
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணம் ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தங்கள் போடப்பட்டதற்கு எதிராக டோர்சி அந்த முடிவை எடுத்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications