பணியாரம் முதல் மசால் தோசை வரை.. ஜி20 மாநாடு: உலக தலைவர்களுக்கு விருந்தாகும் 500 இந்திய ருசி டிஷ்கள்!
டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ், இந்தியாவின் ஸ்பெஷல் சாட்களான சமோசா, ரசகுல்லா, பணியாரம், பானிபூரி என சுமார் 500 இந்தியாவின் ஸ்பெஷல் உணவுகள் வழங்கப்பட உள்ளன.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக தனது நிலையை இந்தியா வலுப்படுத்தி வரும் நிலையில் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது இந்தியா. செப்டம்பர் 9, 10 (இன்றும் நாளையும்) நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட பலர் இந்தியா வருகின்றனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கவும், இந்தியாவின் செழுமைமிக்க கலாசாரத்தை அவர்களுக்கு காட்டவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மாநாட்டை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் மாநாட்டுக்கான ஒவ்வொரு வேலையையும் செதுக்கி செய்துள்ளனர். உணவு ஏற்பாடுகளும் சிறப்பான வகையிலேயே செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகள் தேடித் தேடி லிஸ்ட் எடுக்கப்பட்டு, உலகத் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக தயாராகின்றன.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபலமான ஐடிசி ஹோட்டல், தாஜ் ஹோட்டல், JW மேரியட் ஹோட்டல் உள்ளிட்ட 11 ஹோட்டல்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர, இந்திய அரசு சார்பில், நாளை ஜி20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்படவுள்ளது. மேலும், ஜி20 பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்தியாவின் ஸ்பெஷலான தெரு உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு ஸ்பெஷலாக வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, இந்தியாவின் தெரு உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான எண்ணம், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும். எங்கள் சமையல் கலைஞர்கள் பல்வேறு வகையான தானியங்கள், பல்வேறு வகையான காய்கறிகள் மூலம் மிகவும் ஸ்பெஷலான உணவுகளுடன் தயாராகின்றனர் எனக் கூறியுள்ளார்.
ஜி20 தலைவர்களுக்கான மெனுவில் சிறுதானியங்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். பல்வேறு வகையான பிராந்திய உணவு வகைகளை உருவாக்க சமையல் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் அவர். உணவுப்பட்டியலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, புலாவ், இட்லி ஆகியவை முக்கிய இடம்பெறும் எனத் தெரிகிறது.
தாஜ் ஹோட்டல் மெனுவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிராவின் ஸ்பெஷல் உணவுகளில் ஒவ்வொரு தட்டில் 12 உணவுகள் உள்ளன. அதே சமயம் ஹை டீக்கான மெனுவில் டெல்லியில் இருந்து சாட், மகாராஷ்டிராவில் இருந்து பாவ் பாஜி மற்றும் தமிழ்நாட்டின் பணியாரம் உட்பட நாடு முழுவதும் ஸ்பெஷலாக உள்ள தெரு உணவுகள் இடம்பெறுகின்றன.

JW மேரியட் ஹோட்டலின் சமையல் இயக்குனர் அனுராக் நர்சிங்கனி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் குழு ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் மிகவும் பிரபலமான உணவுகளைத் தயாரிக்கின்றனர். "நாங்கள் 170 வகை உணவுகளை வழங்குவோம். இதில் லாஸ் மாஸ், ரோகன் ஜோஷ், பிண்டி சோல், சிக்கன் கோலாபுரி, சிக்கன் செட்டிநாடு மற்றும் பல பிரபலமான உணவுகள் அடங்கும். ஒவ்வொரு நாளும் ஒரு இந்திய கோழிக் கறி, இந்திய ஆட்டுக்குட்டி கறி, இந்திய மீன் குழம்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்பதால், பலர் இந்தியாவின் ஸ்பெஷலான காரம் தூக்கலான மசாலா உணவுகளை விரும்புவார்களா என்ற கேள்வி இருப்பதால், அதை மனதில் கொண்டு உணவுகள் தயாரிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. "எங்களிடம் பாதுகாப்பான முர்க் பிரியாணி போன்ற சாய்ஸ்கள் உள்ளன, அவை காரமாக இருக்காது என அனுராக் நர்சிங்கனி கூறியுள்ளார். வேகவைத்த பீன்ஸ் மற்றும் ஷவர்மாக்களான ஃபுல் மெடாமாக்களை நாங்கள் வழங்குவோம். கிரில்லில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சமையல்காரரை நாங்கள் வரவழைத்துள்ளோம்" என்கிறார் செஃப் அனுராக்.

ஐ.நா.வில் இந்தியாவின் சிறுதானியம் பற்றிய கருதுகோள்களுக்கும், 2023 சிறுதானிய ஆண்டாகக் கருதப்படுவதற்கும் ஏற்ப, மாநாட்டு மையத்திலும் ஹோட்டல்களிலும் உள்ள மெனுக்கள் பெரும்பாலும் சிறுதானியங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மெனுக்களில் கூட, சிறுதானியங்களை இணைக்க முயற்சித்துள்ளோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் பேட் தாய் ரெசிபியில் ராகியை சேர்த்து தயாரிப்போம் எனக் கூறியுள்ளார்.
மேலும், ராஜஸ்தானின் தால் படி சர்மா, மேற்கு வங்கத்தின் ரசகுல்லா, தென் இந்தியாவின் மசால் தோசை, பீகாரின் லிட்டி சோக்கா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு உணவுகளும் மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடையே பரிமாறப்பட உள்ளது. இவை தவிர்த்து, பானி பூரி, சப்பாத்தி சாத், தஹி பல்லா, சமோசா ஆகியவையும் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளின் உணவுத் தட்டுகளில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டு தலைவர்களுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பபட்ட பாத்திரங்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்களுக்கு ஐரிஸ் மெட்டல்வார் எனும் கிராக்கரி நிறுவனம் சார்பில் தங்கம், வெள்ளி தட்டுகள் உள்பட பல பாத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பாத்திரங்கள் ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகா உள்பட பல இடங்களில் உள்ள பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications