ராகி இட்லி டூ பாசிப்பயறு தோசை வரை.. நாடாளுமன்ற கேன்டீனில் புதிய மெனு.. எம்பிக்களுக்கு ஜாக்பாட்
டெல்லி: ‛‛சுவையை விட்டுத்தரக்கூடாது... அதேவேளையில் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யக்கூடாது...'' என உத்தரவிட்டு நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கான மெனுவில் மாற்றம் செய்துள்ளார் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா. அதன்படி நாடாளுமன்ற கேன்டீனில் இடம்பெற்றுள்ள புதிய மெனுக்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 21ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி அங்குள்ள கேன்டீன் மெனுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவின் பேரில் இந்த புதிய மெனு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேன்டீன் மெனு மாற்றம்
‛சுவையை விட்டு தரக்கூடாது.. அதேவேளையில் ஆரோக்கியத்தில் எந்த காரணம் கொண்டும் சமரசம் செய்யக்கூடாது'' என்ற உத்தரவில் லோக்சபா சபாநாயகர் இந்த புதிய மெனுவை அறிமுகம் செய்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிக்காட்டுதல்படி இந்த புதிய மெனு அறிமுகம் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற கேன்டீனில் சுவைமிக்க காய்கறி கூட்டுகள், தாளி எனப்படும் உணவு தட்டில் சோறு - ரொட்டி ஆகியவை வழக்கம்போல் கிடைக்கும். அதன்பிறகு கார்ப்போஹைட்ரேட்டுகள் சோடியம் உள்ளிட்டவை குறைந்த அளவிலும், நார்ச்சத்துகள், புரதம் உள்ளிட்டவை அதிகம் இருக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகள் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
காலை உணவு என்ன?
அதன்படி காலை நேர ‛பிரேக்பாஸ்ட்' உணவாக ராகி இட்லி, சாம்பார் சட்னி வழங்கப்பட உள்ளது. இது 280 கலோரி கொண்டது. அதேபோல் 206 கலோரி கொண்ட சோள உப்புமா, 161 கலோரி கொண்ட சர்க்கரை இல்லாத மிக்ஸ் சிறுதானிய கீரை கொடுக்கப்பட உள்ளது.
அதேபோல் வடஇந்தியாவில் பிரபலமான பாசிப்பயறு தோசை, சன்னா சாட் (Chana Chaat) போன்றவை இனி கிடைக்க உள்ளது.
அசைவ உணவு பட்டியல்
நாங்கள் எல்லாம் அசைவம் என கூறும் எம்பிக்களுக்காக வேகவைத்த காய்கறிகளுடன், வேகவைத்த கிரில்ட் சிக்கன், கிரில்ட் மீன் உள்ளிட்டவை மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை அளவை உடலில் அதிகப்படுத்தும் பானங்களுக்கு பதில் கிரீன்டீ, மூலிகை தேநீர், வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட மாம்பழ பானம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்நாக்ஸ் - பானங்கள்
மேலும் ஸ்நாக்ஸ் மற்றும் பானங்களை விரும்பும் எம்பிக்களுக்கும் ஸ்பெஷல் ஐட்டம் உள்ளது. அது என்னவென்றால் கிரீன் டீ, மூலிகை டீ, மசாலா சாத்து (Masala Sattu), சர்க்கரை இல்லாத மாம்பழ பன்னா ஜூஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 284 கலோரி கொண்ட பார்லி மற்றும் சோள சாலட், பல்வேறு காய்கறிகள் சேர்ந்த 113 கிலோ கலோரி கொண்ட கார்டர் பிரஸ் சால்ட் கிடைக்க உள்ளது. தக்காளி சூப், துளசி சூப், வெஜிடபிள் சூப் உள்ளிட்டவை சுடச்சுட இடம்பெற உள்ளது.
மேலும் இனிப்பான பானம் வேண்டும் என்பவர்களுக்காக இனிப்பு இல்லாத 161 கலோரி கொண்ட மில்லட் கீர் (Millet Kheer) தயாரிக்கப்பட உள்ளது. உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும் வகையில் உணவில் இருக்கும் கலோரிகள் பற்றிய விவரங்கள் தனித்தனியே இடம்பெற செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications