டிவி முதல் ஏசி வரை.. ஜிஎஸ்டி வரி குறைப்பால் வீட்டு உபயோக பொருட்களின் விலை சரிகிறது.. இதோ லிஸ்ட்
டெல்லி: மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் முடிவில் வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல் கேக், பிஸ்கட், பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் உள்ளிட்ட பிற உணவு பொருட்களுக்கான வரியை குறைத்து அறிவித்துள்ளார். அதோடு பால், ரொட்டி, சப்பாத்திக்கான ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அவற்றின் விவரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ஜிஎஸ்டியில் சீர்த்திருங்கள் கொண்டு வரப்பட உள்ளது. தீபாவளி பரிசாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். அதன்படி நேற்று டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் தற்போது நடைமுறையில் உள்ள 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 2 நீக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளது. மாறாக 5 சதவீதம், 18 சதவீத வரிகள் நடைமுறையில் தொடர உள்ளது.
இந்த ஜிஎஸ்டி மீட்டிங் இரவு 10 மணியளவில் முடிவடைந்தது. அதன்பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
* பால், ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
* மக்களின் தினசரி பயன்பாட்டில் உள்ள தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய், ஷாம்பு, டூத்பேஸ்ட், கழிவறை சோப்பு, பல் தேய்க்கும் பிரஷ், சேவிங் க்ரிம் உள்ளிட்டவற்றின் மீதான 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
* வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், பால் டப்பாக்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், Diapers, தையல் மெஷின் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* நொறுக்கு தீனிகள் மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* கேக், பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
* பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சர்க்கரை, நிறமுட்டி, சர்க்கரை கட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* வீடுகளில் பயன்படுத்தப்படும் டிவி, ஏசி, கார் உள்ளிட்டற்றவின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications