பாபா ராம்தேவுக்கு மட்டும் பெட்ரோல் விலை குறையுது.. நம்ம"தீப்பொறி திருமுகம்"பார்த்தா அப்படியே இருக்கே
டெல்லி: பாபா ராம்தேவிடம் யோகா கற்றுக் கொண்டீர்களேயானால் உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 06 ரூபாயாக தெரியும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூனுடன் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. மேலும் பல கட்சிகள் இந்த விலையுயர்வுக்கு கண்டனங்கள் தெரவித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ஒரு கார்ட்டூனை வரைந்துள்ளார். ஒரு பெட்ரோல் பங்கின் முன்பு லிட்டர் பெட்ரோல் ரூ 90 என எழுதியுள்ளது.

மலையாளம்
இதை பாபா ராம்தேவ் தலைகீழாக நின்று பார்க்கிறார். அப்போது அவரது கண்களுக்கு பெட்ரோல் விலை 06 ரூபாயாக தெரிகிறது. எனவே பாபா ராம்தேவிடம் யோகா பயின்றால் உங்கள் கண்களுக்கும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 06 ஆக தெரியும் என மலையாளத்தில் எழுதிய வாக்கியத்தை மொழிபெயர்த்துள்ளார் சசி தரூர்.

டீசல்
பெட்ரோல் விலை டெல்லியில் ரூ 89.29 க்கும் மும்பையில் 95.75 க்கும் டீசல் விலை டெல்லியில் 79.70 க்கும், மும்பையில் 86.72க்கும் விற்பனையாகிறது. மத்திய பிரதேசத்தில் போபாலில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ 100 ஐ தொட்டது.

கேள்வி
ராஜ்யசபாவில் சமாஜ்வாதி கட்சி எம்பி விஷம்பர் பிரசாத் நிஷாத், சீதாவின் நேபாளத்திலும் ராவணனின் இலங்கையிலும் குறைந்துள்ள பெட்ரோல் டீசல் விலை ராமரின் இந்தியாவில் மட்டும் அதிகரிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

வித்தியாசம்
சசி தரூர் இப்படி யோசிச்சால் நம்ம ஆளுங்க எப்படி யோசிக்கறாய்ங்க பாரு. மீம்ஸ்ன்னாலே நம்ம வடிவேலுதான். வடிவேலை வச்சி இவிங்க திங் பண்றதை பார்த்தா சசி தரூர் திங்கிங்கும் நம்மாளுங்க திங்கிங்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கே!

மீம்ஸ்கள்
ஒரு பெட்போல் பங்கில் பெட்ரோல் விலை ரூ 90.90 க்கும் டீசல் விலை ரூ81.99 க்கும் விற்பனை செய்யப்படுவதாக காட்டுகிறது. இதை தலைகீழாக பார்த்தால் டீசல் விலையாவது 66.18 என தெரிகிறது. ஆனால் பெட்ரோலின் விலை எப்படி பார்த்தாலும் ரூ 90 தானே காட்டுது என மீம்ஸ்கள் அதகளப்படுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications