Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம்.. ரத்து செய்யப்படும் ரயில்கள்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பல ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டது. ஆனால், தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. அதேசமயம், விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில், நாளை (பிப்.18) நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Farmers Countrywide Train Blockade On February 18 canceled trains full list

நாளை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் நான்கு மணி நேரம் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் சில பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாபில் பல ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன் முழு விவரம் இங்கே,

பிப்ரவரி 16 ஆம் தேதி தர்பங்காவில் இருந்து அமிர்தசரஸ் கிளம்பும் தர்பங்கா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் (05211) மற்றும் பிப்.17ம் தேதி அமிர்தசரஸிலிருந்து தர்பங்கா திரும்பும் அமிர்தசரஸ்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் (05212) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பின்வரும் ரயில்கள் பாதி தூரத்தில் நிறுத்தப்படும்

  • 02715 - பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் நாந்தேத்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சண்டிகரில் நிறுத்தப்படும்.
  • 02716 - அமிர்தசரஸ்-நாந்தட் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 19 ஆம் தேதி சண்டிகரில் கிளம்பும்.
  • 08237 - கோர்பா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 17 ஆம் தேதி அம்பாலாவில் நிறுத்தப்படும்,
  • 08238 - அமிர்தசரஸ்-கோர்பா எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 19 ஆம் தேதி அம்பாலாவிலிருந்து கிளம்பும்.
  • 09613 - பிப்ரவரி 17 ஆம் தேதி அஜ்மீர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் ஜலந்தர் நகரில் நிறுத்தப்படும்.
  • 09612 - அமிர்தசரஸ்-அஜ்மீர் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜலந்தர் நகரிலிருந்து கிளம்பும்

பின்வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது

  • 02903 - பிப்.16 அன்று கிளம்பும் மும்பை சென்ட்ரல் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • 02904 - பிப்ரவரி 17 அன்று கிளம்பும் அமிர்தசரஸ் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் அமிர்தசரஸ்-தரந்தரன்-பியாஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • 02925 - பிப்ரவரி 17 அன்று கிளம்பும் பாந்த்ரா டெர்மினஸ் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • 02926 - அதே பிப்ரவரி 17 அன்று திரும்பும் அமிர்தசரஸ் - பாந்த்ரா டெர்மினஸ் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-தரந்தரன்-பியாஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 அன்று இயங்கும் 04673/04649 ஜெயநகர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 அன்று இயங்கும் 04650/04674 அமிர்தசரஸ்-ஜெயநகர் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-தரந்தரன்-பியாஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 ஆம் தேதி கிளம்பும் 04652 அமிர்தசரஸ்-ஜெயநகர் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-தரந்தரன்-பியாஸ் பாதை வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 அன்று கிளம்பும் 04654 ஜெயநகர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 ஆம் தேதி கிளம்பும் 02407 நியூ ஜல்பைகுரி - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 ஆம் தேதி கிளம்பும் 02054 அமிர்தசரஸ்-ஹரித்வார் எக்ஸ்பிரஸ், பியாஸ்-தரந்தரன்-அமிர்தசரஸ் வழியாக திருப்பி விடப்படும்.
  • பிப்ரவரி 17 அன்று கிளம்பும் 02053 ஹரித்வார்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-தரந்தரன்-பியாஸ் வழியாக திருப்பி விடப்படும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+