இன்று முழு சூரிய கிரகணம்! 7 நிமிடங்களுக்கு இருளில் சூழ போகும் பூமி! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
டெல்லி: இந்த ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியுமா, இந்திய நேரப்படி எந்த நேரத்தில் கிரகணம் தொடங்குகிறது, சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும் என்பதை பார்க்கலாம்.
கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும். கடந்த முறை நிகழ்ந்த சூரிய கிரகணத்தை விட இந்த ஆண்டு நிகழும் கிரகணத்தின் நேரம் அதிகமாக இருக்கிறது.

மேற்கண்ட 3 நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை காண முடியும் என்பதால் இது எத்தனை அரியது என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.
நயாகரா நீர் வீழ்ச்சி: இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. சூரிய கிரகணத்தை காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் அருகே லட்சக்கணக்கானோர் கூடுவர் என தெரிகிறது. இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்த கிரகணத்தில் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகும்.
இந்தியாவில் எப்போது: இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், முழு கிரகணமாக 10.08 மணிக்கு வரும் பிறகு அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் நம்மால் பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 நாடுகளில் பயணிக்கும் கிரகணம்: இந்த கிரகணம் 185 கி.மீ. தூரம் வரை மேற்கண்ட 3 நாடுகளுக்கு இடையே பயணிக்கிறது. அமெரிக்காவை பொருத்தமட்டில் 18 மாகாணங்களில் இதை காணலாம். மெக்சிக்கோவில் பிசிபிக் கடலோர பகுதியில் இருப்பவர்கள்தான் இந்த கிரகணத்தை முதலில் காண்பர். இந்த கிரகணத்தின் மொத்த நிகழ்வும் 2 முதல் இரண்டரை மணிநேரம் நிகழும். முழு சூரிய கிரகணம் 4 நிமிடங்கள் 27 வினாடிகள் வரை இருக்கும். கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் நேரத்தை விட இரட்டிப்பு ஆகும்.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
2150 வரை அரிய கிரகணமே இல்லை: இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே இன்று நடைபெறுகிறது. கிரகணத்தை வெறுங்கண்களால் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் கண்ணின் கருவிழியில் பாதிப்பு ஏற்படலாம். இல்லாவிட்டால் நிரந்தரமாக கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை பறிபோகும் அபாயம் இருக்கிறது.
ஒரு வேளை உங்கள் ஊரில் இந்த சூரிய கிரகணம் தெரியாவிட்டால் நாசா நேரலையாக ஒளிபரப்புகிறது. இன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை ஒளிபரப்பப்படும்.












Click it and Unblock the Notifications