விலகிய "டை.." உடனே சரி செய்த அக்ஷதா மூர்த்தி! அப்போ ரிஷி சுனக் தந்த ரியாக்ஷன் இருக்கே செம க்யூட்
டெல்லி: ஜி20 மாநாடு இப்போது டெல்லியில் நடக்கும் நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தியின் படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்று தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. சுழற்சி முறையில் வழங்கப்படும் ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தாண்டு இந்தியா ஏற்றுள்ள நிலையில், கடந்த ஓராண்டாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

அதன்படி இப்போது தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். இதனால் அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
ஜி20 மாநாடு: இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பல நாடுகளின் தலைவர்களும் இந்தியா வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் நேற்று இந்தியா வந்த நிலையில், அவர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். அதேபோல பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இதில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமரான பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா வந்த ரிஷி சுனக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரிஷி சுனக் அவரது மனைவியும் இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி உடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். இருவரும் ஒன்றாகவே எங்கும் செல்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த க்யூட் நிகழ்வு ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டிரெண்டிங்: பொதுவாக அரசியல்வாதிகள் என்ன தான் போட்டோவுக்காக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் எதார்த்தமாக எடுக்கப்படும் படங்கள் மட்டுமே மக்கள் மனங்களை அதிகம் கவரும். அதுபோல ஒரு படம் தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படம் பலரது இதயங்களையும் வென்ற படமாக மாறிவிட்டது. விமானத்தில் எடுக்கப்பட்ட இருவரும் இருக்கும் சாதாரண போட்டோவை போல இது இருந்தாலும் இது பலரையும் கவர்ந்துவிட்டது.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் வந்த நிலையில், அப்போது தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் இறங்குவதற்கு முன், லேசாக விலகி இருந்த தனது கணவரின் டையை அக்ஷதா மூர்த்தி சரிசெய்வதை நாம் இதில் காணலாம். இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இந்த போட்டோ இருக்கிறது.
நெட்டிசன்கள்: ரிஷி சுனக் இந்தப் போட்டோவை பகிர்ந்த உடனேயே இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. நெட்டிசன்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். இருவருக்கும் இடையே காதல் கொட்டி கிடைப்பதையே இந்தப் போட்டோ காட்டுவதாகவும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியமும் ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. இது ஆப்பிரிக்காவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications