ஜி20 உச்சி மாநாடு: ஜனாதிபதி அளித்த விருந்து.. ஒரே பஸ்சில் சென்ற "இந்தியா" கூட்டணி மம்தா-முக ஸ்டாலின்
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஜனாதிபதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' யில் அங்கம் வகிக்கும் தலைவர்களான மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரே பேருந்தில் ஒன்றாக சென்றனர்.
ஜி20 தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும். அதன்படி, கடந்தாண்டு இந்தோனேசியாவில் இந்த மாநாடு நடந்த நிலையில், நடப்பாண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிரேசில் நாட்டிலும் அதற்கு அடுத்தாண்டு தென்னாப்பிரிக்காவிலும் நடக்க இருக்கிறது. அதன்படி, டெல்லியில் ஜி 20 மாநாடு நடக்கிறது.

இந்த மாநாடு இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜி 20 கூட்டத்தில் பிரகடனமும் வெளியானது. இதைஅனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி உணவு விருந்து அளித்தார். இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' யில் அங்கம் வகிக்கும் தலைவர்களான மம்தாவும் முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரே பேருந்தில் ஒன்றாக சென்றனர். இது அரசியல் அரங்கிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாநில முதல்வர்கள் அனைவரும் மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்த பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications