ஜி 20 மாநாடு: டெல்லியில் அடுத்தடுத்து வந்து இறங்கிய உலக தலைவர்கள்.. யாரு எல்லாம் பாருங்க! லிஸ்ட்
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். அவரை தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரும் டெல்லி வந்தடைந்தனர்.
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.

இதேபோல் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், சீனா அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
தற்போது உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று மாலை 6.55 மணியளவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார். தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அடுத்து பல்வேறு உலக தலைவர்களும் இந்தியா வந்துள்ளனர். அதன்படி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலக வங்கி தலைவர் அஜய் பங்கா இந்தியா வந்தடைந்தார்.
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற வந்த அஜய் பங்காவுக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரவு 10.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார். இவர்கள் அனைவரும் அவர்களுக்கு என்று டெல்லியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தங்க வைப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications