"நேம் சேஞ்ச்".. இனிமேல் குரங்கம்மை என ஒருத்தரும் சொல்ல கூடாதாமே.. ஏன் தெரியுமா.. அதென்ன "எம்பாக்ஸ்"
குரங்கம்மையின் புது பெயர் எம்பாக்ஸ் என வைத்துள்ளது உலக சுகாதார நிறுவனம்
டெல்லி: குரங்கம்மை நோயின் பெயரை எம்பாக்ஸ் ('MPOX') என்று மாற்றிட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக, ஒரு நோயின் பெயரை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது கிடையாது.. முதலில் இது அவ்வளவு முக்கியமா? என்றும் கேள்விகள் எழலாம்.. ஆனால், இதற்கான பின்னணிகள் வலுவாக உள்ளது என்பதே நிஜம்.
இந்த குரங்கம்மை எனப்படும் நோயானது, ஆப்ரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பரவும்.. எப்படியோ இந்தியாவுக்குள்ளும் நுழைந்து ஆட்டுவித்து வருகிறது..

விலங்கு பெயர்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவிட்டது.. உலக அளவில் 80,000 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டனர்... இதன் பரவலை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டில் உலகளாவிய அவசரநிலையை உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.. பொதுவாக எந்த விலங்குகளிடம் இருந்து, தொற்று பரவுகிறதோ, அந்த நோய்க்கு சம்மந்தப்பட்ட விலங்கின் பெயர் சூட்டுவதுதான் வழக்கம்... ஆனால், குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது..

நேம் சேஞ்ச்
அதனால்தான், அந்த பெயரை வைக்காமல், புது பெயரை சூட்டவும் முடிவு செய்தது. அதன்படி இப்போது எம்பாக்ஸ் (mpox) என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது... அநேகமாக அடுத்த வருடம் வரை குரங்கம்மை என்ற பெயரும் பயன்படுத்தப்படும் என்றும், அதன்பிறகு வேண்டுமானால் எம்பாக்ஸ் என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு நோய்க்கு இன்னொரு பெயர் சூட்டப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

Monkeypox
குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டுவது போல இருக்கும் என்றும், பாரபட்சமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் வந்ததாம்.. அதனால்தான், இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.. இன்னொரு காரணமும் உள்ளது.. வைரஸ் பரவல் மூலம் ஏற்படும் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பல வருட காலமாகவே கோரிக்கைகளும் எழுந்து வந்தது.. அதனால், குரங்கம்மை நோய் மற்றும் வைரஸ்களுக்கு புதிய பெயர் சூட்ட முடிவு செய்த உலக சுகாதார அமைப்பு, அதற்காக, பொதுமக்களிடமே கருத்து கேட்டது..

MPOX
புது பெயர்கள் ஏதாவது இருந்தால் தெரிவிக்குமாறும் பரிந்துரை செய்திருந்தது.. இப்படி பல தரப்பு கருத்துகளையும் பரிசீலித்த உலக சுகாதார நிறுவனம், கடைசியில் Monkeypox என்பதற்கு பதிலாக "MPOX" என மறுபெயரிட திட்டமிட்டுள்ளது.. இந்த குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது, இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்றாலும், குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications