டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபரப்பு பேச்சு.. சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுத சொன்னதே காந்திதான்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

காந்தி, வீரசாவர்க்கர் குறித்து ராஜ்நாத் சிங் விழாவில் பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்க செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இன்று வரை திகழ்ந்து வருபவர் சாவர்க்கர்... குறிப்பாக, இவர் அந்தமான் சிறையில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனு அளித்து விடுதலையானது குறித்து தொடர்ந்து இன்றுவரை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதுகுறித்த பேச்சைதான் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.. டெல்லியில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

சென்டிமென்டை உடைத்த திமுக.. வடமாவட்டங்களில் 3 கட்சிகளுக்கு செக்.. கலைந்து போன பாமகவின் கனவு சென்டிமென்டை உடைத்த திமுக.. வடமாவட்டங்களில் 3 கட்சிகளுக்கு செக்.. கலைந்து போன பாமகவின் கனவு

பரபரப்பு

பரபரப்பு

அதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது. சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்.

 கோட்பாடு

கோட்பாடு

20 ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வலுவான பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர கோட்பாட்டை வழங்கியவர் சாவர்க்கர்தான்.. சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கையை பலர் பலவாறாக கூறுகிறார்கள்.. "இந்து" வார்த்தை எந்த மதத்துடனும் தொடர்புடையது கிடையாது.. அது இந்தியாவின் புவியியல், அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது.. சாவர்க்கரை பொறுத்தவரை, இந்துத்துவா கலாச்சார தேசியத்துடன் தொடர்புடையவர்... அவரது இந்துத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

 சுதந்திரமானவை

சுதந்திரமானவை

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, "இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மா போன்றவை சுதந்திரமானவை... இந்த கலாச்சாரத்தை நாம் காலம் காலமாக வளர்த்து வருகிறோம்... வழிபாட்டை அடிப்படையாக வைத்து யாரும் இதை பிரித்து பார்க்கவில்லை. இந்துக்களின், முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஒன்றுதான். இந்த சிந்தனை மட்டும் சுதந்திர போராட்டத்தின்போது எல்லாருடைய மனதில் இருந்திருந்தால், அப்போதே இந்தியா பிளவுபடுவதை கண்டிப்பா தடுத்திருக்கலாம்.

 சாவர்க்கர்

சாவர்க்கர்

சாவர்க்கர் ஒரு தேசியவாதி.. தொலைநோக்கு சிந்தனை உடையவர்... சாவார்க்கரின் இந்துத்துவா என்பது ஒருங்கிணைந்த இந்தியாதான்.. மதம், சாதி, வாழ்க்கைத் தரம் போன்றவைகளின் அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தி காட்டக்கூடாது என்பதே அவருடைய சித்தாந்தம்.. இதுதான் இந்த தேசத்தின் அடிப்படை..!

பிரிவினை

பிரிவினை

சாவர்க்கர் ஒருமுறை சொல்கிறார், இந்தியாவை நாம் ஆள வேண்டுமானால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினால்தான் முடியும் என்று புரிந்து கொண்டார்கள், அதனால்தான், இப்படியெல்லாம் பிரிவினையை ஏற்படுத்த முயன்றனர்" என்கிறார்.. எத்தனையோ விதமான வழிபாடுகள் இந்து தேசியவாதம் ஒன்றுதான் என்று சாவர்க்கர் எழுதினார்.. இந்திய சமூகத்தில் பலரும் இந்துத்துவா, ஒற்றுமை குறித்து பேசி வருகிறார்கள்.. ஆனால், சவார்க்கர் இதைதான் அன்றே உரக்க பேசினார்...

 முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

இப்போ பல வருஷங்களுக்கு பிறகு, நாம் அதை உணர்ந்துள்ளோம்.. நம்ம நாட்டில் எந்த பிரிவினையும் வந்துடக்கூடாது என்று இப்போது சத்தமாக பேசி கொண்டிருக்கிறோம். சுதந்திரத்தின்போது நாடு பிளவுபட்டதே, அப்போது, இந்தியாவிலிருந்து நிறைய முஸ்லிம்கள் பாகி்ஸ்தானுக்கு சென்றார்கள்.. ஆனால், இன்னைக்கு இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் கிடைக்கவில்லை...

 வழிபாட்டு

வழிபாட்டு

ஏனென்றால், அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்... இதை யாராலும் மாற்ற முடியாது... நமக்குன்னு ஒரே மூதாதையர்கள்தான்.. ஆனால், நம்முடைய வழிபாட்டு முறையாதான் வேறுபட்டுள்ளது... சனாதன தர்மத்தின் சுதந்திரமான கலாச்சாரத்தில் இருக்கிறோம் என்ற பெருமைதான் நமக்கு வேண்டும்... அதனால்தான் இந்தியாவில் இன்றுவரை அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.

கடவுள்

கடவுள்

சாவர்க்கரின் இந்துத்துவா, விவேகானந்தர் இந்துத்துவா என்பதெல்லாம் வேறு வேறு இல்லை.. எல்லாமே ஒன்றுதான். எல்லாருமே ஒரே கலாச்சார தேசியவாதத்தை பற்றிதான் பேசுகிறார்கள்.. ஆனால், மக்கள் தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் வேறுபடுவதில்லை... எதற்காக வேறுபட வேண்டும்? நாமதான் ஒரே தேசத்தில்தானே பிறந்தோமே.. ஒன்றாகத்தானே போராடினோம்.. வழிபடும் கடவுளும், முறையும்தான் வேறுபட்டுள்ளதே தவிர, பல்வேறு விதமான கடவுள் வழிபாடு என்பது நமது பாரம்பரியமாக வந்தது" என்றார்.

English summary
Gandhi asked Savarkar to file mercy plea before British, Says Minister Rajnath singh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X