காந்தி பெயரும் M என்ற எழுத்தில்தான் தொடங்குது பாருங்க- ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகாத்மா காந்தி பெயரும் எம் என்ற எழுத்தில்தான் தொடங்குது என்று ராகுல் காந்தியின் சர்வாதிகாரிகள் டிவிட்டுக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டெல்லி: மகாத்மா காந்தியின் பெயர் மோகன்தாஸ், எம் என்ற எழுத்தில்தான் தொடங்குகிறது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் M என்ற எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ என பட்டியலிட்டிருந்தார்.

எம் என்ற எழுத்தை சர்வாதிகாரிகளின் பெயரோடு குறிப்பிட்டு பிரதமர் மோடியை அவர் மறைமுகமாக சர்வாதிகாரி என்று சாடியிருந்தார். இந்த ட்வீட்டிற்கு பா.ஜ.கவினர் கொதித்தெழுந்தனர்.
பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி சொல்வதை எல்லாம் தீவிரமாக எடுத்து கொள்ள கூடாது என்று கூறியுள்ளார். அவரது அணுகுமுறை இந்திய அரசியலில் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
M से Mohandas भी थे - साबरमती के संत, बापू – the greatest apostle of truth and non-violence.
— Prakash Javadekar (@PrakashJavdekar) February 3, 2021
भारत की मिटटी की बात ही अलग है, ये तानाशाह नहीं बुद्ध और महावीर की वसुधा है।
छोड़िये आप नहीं समझेंगे @RahulGandhi ji... https://t.co/wtUn1vI54F
இதனிடையே பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் டிவிட்டரில், மகாத்மா காந்தியின் பெயர் மோகன்தாஸ், எம் என்ற எழுத்தில்தான் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications