காந்தி இயக்கம் பற்றி மக்கள் அறிய வருகிறது "காந்திபீடியா" தகவல் களஞ்சியம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: தகவல் களஞ்சியம் என்றழைக்கப்படும் விக்கிபீடியா போல, காந்தி இயக்கம் பற்றி மக்கள் அறிந்து கொள்ள காந்திபீடியா உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பயனர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் தாக்கலின் போது பேசிய அமைச்சர் விக்கிபீடியா போல, காந்தி இயக்கம் பற்றிய கொள்கைகள் முழுவதையும் அறிந்து கொள்ள காந்திபீடியா உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும் காந்திபீடியா பக்கம் நேர்மறையான காந்திய கொள்கைகளை உலகம் முழுவதிலும் பரப்பும் வகையில் உருவாக்கப்படும்.
காந்திய எண்ணங்கள் மற்றும் தத்துவம் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தால் 'காந்திபீடியா' அமைக்கப்படும் என கூறினார்.
மேலும் காந்திபீடியா என்பது மகாத்மா காந்தியின் படைப்புகள் மற்றும் அவர் எழுதிய புத்தகங்களின் தொகுப்பாக அமைக்கப்படும். காந்திய இலக்கியம், தத்துவம், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் அமைக்கப்படும் என்றார்.
2109- ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அரசு நிகழ்வுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி உலகம் முழுவதிலும் மோடி தலைமையிலான அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள பயனாளர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications