Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிண்டர் விலை உயர்ந்தது.. எல்பிஜி கேஸ் விலையால் அதிரும் மக்கள்..இவ்ளோ ஜாஸ்தியா.. ஆனாலும் ஒரு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7 உயர்ந்துள்ளது. ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இந்த எல்பிஜி விலையை உயர்த்தியுள்ளன... அந்தவகையில், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்ந்து ரூ.1,773-லிருந்து ரூ.1,780க்கு விற்பனையாகிறது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து திருத்தம் செய்யப்படுகிறது.. கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது... எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

Gas cylinder, Commercial LPG cylinder prices hiked 19 kg cylinder in all over India

எண்ணெய் விலை: மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்றும், முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், இதற்கு பிறகு, மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ளதால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம்.. அல்லது, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும், ஜூலை 1 முதல் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்றும் நம்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே அறிவிப்பு வரவில்லை..

ஜூலை 1ம் தேதி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மற்றும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துவிட்டது..

வணிக நிறுவனங்கள்: இந்நிலையில் வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை சிலிண்டர் ஒன்றிக்கு ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.7 உயர்ந்துள்ளது.. இந்த விலைமாற்றத்தைத் தொடர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,773 இருந்து ரூ.1,780 ஆக உயர்ந்துள்ளது.. எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த விலை உயர்வு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இப்புதிய விலை உயர்வின்மூலம், 19 கிலோ கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் விலை கொல்கத்தாவில் 1902 ரூபாயும், மும்பையில் 1740 ரூபாயும், சென்னையில் 1952 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

சிலிண்டர் வகைகள்: 19-கிலோ எல்பிஜி சிலிண்டர் முதன்மையாக தொழில்துறை மற்றும் வணிக நுகர்வுக்காகவும், 47.5 கிலோ மற்றும் 425 கிலோ LPG சிலிண்டர் வகைகளிலும் உள்ளது. 5 கிலோ மற்றும் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்கள் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

கடைசியாக வணிக சிலிண்டர்களின் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ரூ.91.50 குறைக்கப்பட்டது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 2022 ஆகஸ்ட் 1ம் தேதியும் ரூ.36 குறைக்கப்பட்டது. அதற்கு முன் ஜூலை 6-ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை யூனிட்டுக்கு ரூ.8.5 குறைக்கப்பட்டது. இருந்தாலும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+