கேஸ் சிலிண்டர் போட்ட போடு.. பாமாயில் அதுக்கு மேல..துவரம் பருப்பு விலையை பாருங்க.. பண்டிகை வேற வருது
டெல்லி: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது.. இது பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது. எனினும், பண்டிகை தினங்களுக்குள் மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலவித இனிப்பு மற்றும் கார வகைகளில் கடலை பருப்பு பயன்படுத்தப்படுவதால், பொதுவாகவே பண்டிகை காலத்தை முன்னிட்டு, பருப்புக்கான தேவைகள் அதிகரிக்கும்... அந்தவகையில், கடலை பருப்பின் விலை 2 மாதங்களுக்கு முன்பு 10 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், துவரம் பருப்பின் விலை மட்டும் 5 சதவீதம் குறைந்திருந்தது.

இதுகுறித்து வர்த்தகர்கள் சொல்லும்போது, கடலை பருப்பின் தேவை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்துள்ளது.. எனினும், செப்டம்பர் மாதத்திற்குள் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் பட்டாணியின் வரியற்ற இறக்குமதிக்கான காலஅவகாசத்தை அரசு மேலும் நீட்டிக்கும் பட்சத்தில், மஞ்சள் பட்டாணியின் விலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது..
பண்டிகை காலம்: கடந்த மாதம் துவரம் பருப்பின் விலை 5 சதவீதம் குறைந்திருந்தாலும், வானிலை மாற்றம், ஆப்பிரிக்க வினியோகத்தில் தாமதம், பண்டிகை தேவை மற்றும் தமிழ்நாடு, ஆந்திர அரசுகளின் கொள்முதலுக்கு எதிர்பார்க்கப்படும் அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால், துவரம் பருப்பின் விலையும் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தனர்.
பொதுவாக, வருடா வருடம் பெய்யும் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில், பெய்யும் பொழுது பருப்பு வகைகளின் விளைச்சல் அதிகரிக்கப்படுகிறது... மாறாக, தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாவிட்டால், விளைச்சலும் குறைந்து பருப்பு வகைகள் விலை நிலவரத்திலும் ஏற்றம் இறக்கம் நிலவுகிறது.
பருப்பு விலை: ஆயுத பூஜை வருவதை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் கொண்டக்கடலை ரூ.200 அதிகரித்துள்ளது.. ஆனால், துவரம்பருப்பு, பாசிபருப்பு விலை குறைந்துள்ளது.. இன்றைய தினம் துவரம் பருப்பு விலை கிலோ 139.00 விற்கப்படுகிறது.. பாசிப் பருப்பு விலை கிலோ 135.00, கடலை பருப்பு கிலோ 110 என்று விற்பனையாகிறது.
அதேபோல மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால் பாமாயில் விலை 2 வாரத்தில் ரூ.525 அதிகரித்து விற்கப்படுகிறது... 2 வாரங்களுக்கு முன்பு ரூ.1,485க்கு விற்ற பாமாயில் டின், கடந்த வாரம் ரூ.375 உயர்ந்து ரூ.1,850க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மேலும் ரூ.150 உயர்ந்து ரூ.2,000 என விற்பனையாகி வருகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.2,800 ஆகவும், நல்லெண்ணைய் டின் ரூ.6,105 ஆகவும் விற்பனையாகிறது.
கேஸ் சிலிண்டர்: இதற்கு நடுவில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை 48.50 ரூபாயும், 5 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை 12 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்வால், அது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது உணவு பொருட்களின் விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களை பெருமளவில் பாதிக்கக்கூடும் என்றும் தெரிகிறது. எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.48.50 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.12 அதிகரித்துள்ளது.
சிலிண்டர் விலை: செப்டம்பர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஏறக்குறைய 39 ரூபாய் உயர்ந்ததைத் தொடர்ந்து, இது 2வது தொடர்ச்சியான உயர்வாகும்.. அதேபோல, 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 1,652.50 ரூபாயில் இருந்து 1,691.50 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.. பண்டிகை காலம் நெருங்கி வரும்சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்திருப்பது, இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,855 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 48 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 1,903 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. புதிய விலை இன்றைக்கே அமலுக்கும் வந்துள்ளன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் வணிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications