கேஸ் விலை உயர்வு! அந்நியன் டூ அம்பி! ஸ்மிரிதி இராணியின் பழையை ட்விட்டை எடுத்து கலாய்த்த நெட்டிசன்கள்
டெல்லி: கேஸ் விலை உயர்வுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொந்தளித்த பாஜக நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி, தற்போது எந்த கருத்தும் சொல்லவில்லை எனக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதேபோல கேஸ் விலை உயர்வு தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்தியாவில் சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை வைத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைவு பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது.

கியாஸ் விலை உயர்வு
ஒரு லிட்டருக்கு ரூ.2 கலால் வரி உயர்த்தப்பட்டது. அதுபோக வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.550-க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853-க்கு விற்பனை செய்யப்படும்.
தற்போது சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடுமையாக போராடிய ஸ்மிரிதி இராணி தற்போது மவுனமாக இருக்கிறாரே எனக் கூறி நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். ஸ்மிரிதி இராணியின் பழைய ட்விட் பதிவு ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெட்க கேடு என பதிவிட்டார்
அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியது. இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்த பாஜகவின் ஸ்மிரிதி இராணி, தங்களை எளிய மக்களுக்கான அரசு என்று சொல்லிக்கொண்டு ரூ.50 விலை உயர்த்துவதா?, 'வெட்க கேடு' என்று பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து இந்த எக்ஸ் பதிவை மீண்டும் தோண்டியெடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா இந்தியா, சீனா மீது பரஸ்பர வரி விதித்துள்ளது. சீனா, அமெரிக்காவிற்கு பதிலடியாக வரி விதித்துள்ளது. அதே நேரத்தில் மோடியோ, கவலையே வேண்டாம்.. நான் இந்திய பொதுமக்கள் மீது பரஸ்பர வரியை விதிக்கிறேன் என விதித்துள்ளர் என பதிவிட்டுள்ளார்.
தெறிக்கும் மீம்ஸ்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கேஸ் விலை உயர்த்தப்பட்டபோது அதற்கு எதிராகல் குரல் எழுப்பிய ஸ்மிரிதி இராணி தற்போது 2025 ஆம் ஆண்டில் மோடி அரசு கியாஸ் விலையை உயர்த்தியபோது எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதை காட்டும் வகையில் இந்த மீம்ஸ் பரவி வருகிறது.

கேஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு மேல இருக்கும்போது ஸ்மிரிதி இராணி வீதியில் இறங்கி போராடினார். ஆனால் இப்போது 853 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது வீட்டில் இருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் என்பது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கியாஸ் விலை அதிகரித்ததற்கு வீதியில் சிலிண்டரை வைத்து போராடி பின் கைது செய்து அழைத்து சென்றதையும், தற்போது கியாஸ் விலை அதிகரித்தும் வீட்டில் அவர் விளையாடிக்கொண்டிருப்பது போன்ற படத்தையும் கம்பேர் செய்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications