வேளாண் சட்டம் குறித்து கங்கனா ரனாவத்தின் ஒற்றை பேச்சு.. குஷியில் காங்கிரஸ்.. ஆடிப்போன பாஜக
டெல்லி: "வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்" என பாஜக எம்பி கங்கனா ரனாவத் பேசிய பேச்சு, பாஜகவையே ஆடிப்போக வைத்துள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பாஜக போராடி வரும் நிலையில், இவரது அண்மைக்கால சர்ச்சை கருத்துக்கள் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறதாம். பாஜக தலைவர்களே இவரது கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று விளக்கம் அளித்து வருகிறார்கள்.
ஹரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஹரியனாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமான முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்று காங்கிரஸ் உற்சாகத்தில் இருக்கிறது. ஏனெனில் கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படம் மற்றும் அவர் விவசாயிகள் குறித்து பேச்சு தான் காரணம் ஆகும். இந்த விவகாரம் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் கங்கனா ரணாவத். இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான இவர், அளித்த புதிய பேட்டி பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் திரும்பப் பெறப்பட்ட விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி கங்கனா கூறுகையில், இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.. ஆனாலும் ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவசாயிகளே அதை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு வலிமையான தூணாக இருக்கிறார்கள். நான் அவர்களிடம் முறையிட விரும்புகிறேன். உங்கள் சொந்த நலனுக்காக சட்டங்கள் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கங்கனா ரனாவத்தின் து பேட்டியை எக்ஸ் தளத்தில் பதிந்த காங்கிரஸ், "இந்த கருப்புச் சட்டங்கள் (இப்போது மீண்டும் கொண்டு வரப்படாது)... மோடியும் அவரது எம்.பி.க்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி சாத்தியமில்லை" எனக்கூறியுள்ளது.
இதனிடையே கங்கனா ரனாவத்தின் பேச்சால் பாஜக தர்ம சங்கடமான நிலையை சந்தித்துள்ளது. அவரது கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாஜக செய்தி தொடர்பான கவுரவ் பாட்டியா இதுபற்றி கூறுகையில், "மத்திய அரசு திரும்பப் பெற்ற விவசாய மசோதாக்கள் குறித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் கூறிய கருத்து பரவி வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா சார்பில் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட கங்கனா ரனாவத்துக்கு அதிகாரம் இல்லை, மேலும் கங்கனாவின் இந்த கருத்தை நாங்கள் (பாஜக) ஏற்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் 99 ரன் எடுத்த பேட்ஸ்மேனுக்கு 100வது ரன் எடுக்க நோபால் போட்டால் எப்படி இருக்கும்..அப்படி ஒரு பாலைகாங்கிரஸ் கட்சிக்காக கங்கனா வீசியிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். கங்கனா ரணாவத் , காங்கிரஸ் கட்சியின் சொத்து என்றும், ஐந்து வருடங்கள் இப்ப பேசினால், பாஜகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், கங்கனா தனது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பதால், இப்படி பழிவாங்குவதாக கிண்டல் செய்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications