டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு?.. என்ன துறை?

பாஜக எம்.பி முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு மத்தியில் அமைச்சரவையில் முக்கிய துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக எம்.பி முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு மத்தியில் அமைச்சரவையில் முக்கிய துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சில வாரங்களுக்கு முன் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாக இவர் கூறி இருந்தார்.

இவர் அரசியல் கட்சியில் சேர்ந்தது பெரிய வைரலானது. கட்சியில் சேர்ந்த உடனே இவர் டெல்லியில் தேர்தலில் போட்டியிட்டார்.

 ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்! ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்!

போட்டியிட்டார்

போட்டியிட்டார்

பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் அரவிந்தர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோரை எதிர்த்து களம் கண்டார். இந்த தேர்தலில் அதிஷி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் வெற்றி

ஆனால் வெற்றி

ஆனால் கவுதம் கம்பீர் 6.96 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அரவிந்தர் 3.04 லட்சம் வாக்குகள் பெற்றார். கல்வியாளர் அதிஷி வெறும் 2 லட்சம் வாக்குகள்தான் பெற்றார். இதனால் தற்போது கம்பீர் முதல்முறை எம்.பி ஆகியுள்ளார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

தற்போது கவுதம் கம்பீர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இவர் விளையாட்டு துறை அமைச்சராக ஆசைப்பட்டு உள்ளார். தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இருக்கிறார்.

ஓகே சொன்னார்கள்

ஓகே சொன்னார்கள்

இந்த நிலையில் கம்பீருக்கு விளையாட்டு துறையை ஒதுக்க பாஜக முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. டெல்லியில் இருந்து இரண்டு அமைச்சர்களை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. அதில், கம்பீர் கண்டிப்பாக இடம்பெறுவர் என்று கூறுகிறார்கள்.

English summary
Former cricketer Gautam Gambhir may get important ministry after his win in LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X