கொரோனா மட்டும் காரணமா?.. இல்லவே இல்லை.. இந்தியாவில் 4 வருடமாக தொடர்ந்து சரிந்த பொருளாதாரம்!
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவால் மட்டுமல்ல, கொரோனாவின் வருகைக்கு முன்பு இருந்தே மோசமான சரிவை நோக்கி சென்று இருக்கிறது.
இந்திய வரலாற்றில் இன்று மோசமான நாள் என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவிற்கு நினைத்து பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து இருக்கிறது. கணித்ததை விட மோசமான சரிவை இந்தியாவின் பொருளாதாரம் சந்தித்துள்ளது.
இந்தியாவின் 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% ஆக சரிந்துள்ளது. கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் 3.1% ஆக வீழ்ச்சி கண்ட ஜிடிபி இப்போது இரட்டை இலக்கத்தை தொட்டுள்ளது.

கொரோனா கடவுள்
இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு கொரோனாவை மத்திய அரசு காரணமாக கூறி வருகிறது. கொரோனா என்பது கடவுளின் செயல், ஜிஎஸ்டி வருவாயில் கொரோனா காரணமாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.கொரோனா காரணமாக எதிர்பார்க்காத முறையில் பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்த வருடம் மிக மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளோம். 2.35 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார்.

கொரோனாவிற்கு முன்பே
ஆனால் இந்தியாவின் ஜிடிபி , பொருளாதாரம் கொரோனாவிற்கு முன்பில் இருந்து சரிவை சந்தித்து வருகிறது. 2016ல் இருந்து இந்தியாவின் ஜிடிபி விவரத்தை பார்த்தாலே இந்த உண்மை புலப்படும்.
- 2016-17 -8.3%
- 2017-18 - 7%
- 2018-19 - இரண்டாவது காலாண்டு - 7.1%
- 2018 -19- மூன்றாவது காலாண்டு - 6.6%
- 2018 -19- நான்காவது காலாண்டு -5.8%
என்று 2019 இறுதியில் ஜிடிபி வளர்ச்சி 5.8 ஆக சரிந்துள்ளது.

மிக மோசமானது
அதற்கு பின் 2019-20ல் ஜிடிபி 5க்கும் கீழே சென்றுள்ளது.
- 2019 -20- முதல் காலாண்டு - 5.0%
- 2019 -20- இரண்டாவது காலாண்டு -4.5%
- 2019 -20- மூன்றாவது காலாண்டு -4.7%
- 2019 -20- நான்காவது காலாண்டு -3.1%

தற்போது எப்படி
தற்போது 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% ஆக சரிந்துள்ளது. கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் 3.1% வீழ்ச்சி கண்ட ஜிடிபி தற்போது -23.9% ஆகியுள்ளது. மொத்தத்தில் கடந்த 4 வருடமாகவே பொருளாதாரம் சரிந்து வந்துள்ளது.இதன் மூலம் 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.
Recommended Video

கொரோனா காரணம் இல்லை
மத்திய அரசு சொல்வது போல தற்போது பொருளாதார சரிவுக்கு கொரோனா மட்டுமே காரணம் இல்லை. இந்தியா பொருளாதார வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது. அந்த வீழ்ச்சியை கொரோனா வேகப்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட வீழ்ச்சியில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வரும் என்பதே தற்போது மாபெரும் கேள்வியாக உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications