மாபெரும் பொருளாதார வீழ்ச்சி இது.. உலக அளவில் இந்தியாதான் மிக மோசம்.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!
டெல்லி: இந்தியா தற்போது அதிகாரபூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஜி7 நாடுகள் மற்றும் ஜி 20 நாடுகள் அனைத்திலும் இந்தியாவின் ஜிடிபி மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் கூட மிக மோசமாக சரிந்துள்ளது. ஆனால் அந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.
இந்தியாவின் 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% ஆக சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.
ஜூலை 2020-ல் 9.6% வீழ்ச்சி கண்ட இந்தியாவின் முக்கிய 8 துறைகள்!

ஏன் மோசம்
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 10% வரை சரிய வாய்ப்புள்ளது அதிகபட்சம் 12% வளர்ச்சி சரிய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இன்னும் சில நிறுவனங்கள் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 22% சரிய வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். ஆனால் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிவை சந்தித்துள்ளது.

ஜி20 நாடுகள்
ஜி20 நாடுகளிலும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிதான் மிக மோசமானதாக உள்ளது. பிரிட்டன் மட்டுமே உலகம் முழுக்க மிக மோசமான சரிவை சந்தித்தது.தற்போது இந்தியா பிரிட்டனை விட மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் இந்தியா தற்போது recession எனப்படும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பயன் இல்லை
இந்த பொருளாதார சீர்கேட்டை சரி செய்ய மத்திய பாஜக அரசு நிறைய திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் இது எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது . ஆர்பிஐயிடம் அவசர நிதியை வாங்கியது உட்பட, இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த விதமான திட்டமும் உயர்த்தவில்லை. மிக முக்கியமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்தது தொடங்கி எல்லாம் இந்தியாவின் ஜிடிபியை சரிவையே நோக்கியே கொண்டு சென்றுள்ளது.

ஜி7 நாடுகள்
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஜி7 நாடுகளில் மிக மோசமானது ஆகும்.
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது
- பிரிட்டன் ஜிடிபி வளர்ச்சி 20.4% சரிந்துள்ளது
- பிரான்ஸ் ஜிடிபி வளர்ச்சி 13.8% சரிந்துள்ளது
- இத்தாலி ஜிடிபி வளர்ச்சி 12.4% சரிந்துள்ளது
- கனடா ஜிடிபி வளர்ச்சி 12% சரிந்துள்ளது
- ஜெர்மனி ஜிடிபி வளர்ச்சி 10.1% சரிந்துள்ளது
- அமெரிக்க ஜிடிபி வளர்ச்சி 9.5% சரிந்துள்ளது
- ஜப்பான் ஜிடிபி வளர்ச்சி 7.6% சரிந்துள்ளது
- சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 3.2% முன்னேறியுள்ளது

இன்னும் சரியும்
இதில் கவலை அளிக்கும் விஷயம், இந்தியாவின் அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளது. உற்பத்தி துறை வளர்ச்சி -39.3% சரிவு, சுரங்கத்துறை வளர்ச்சி -23.3 % சரிவு, மின்சார துறை வளர்ச்சி -7 % சரிவு, பொதுத்துறை -10 % சரிவு, ஹோட்டல்/டிரான்ஸ்போர்ட் -47 % சரிவு, கட்டுமானம்-50 % சரிவை சந்தித்துள்ளது.

இனி என்ன நடக்கும்
இதனால்தான் தற்போது அதிகாரபூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் இனி வரும் நாட்களில் மாபெரும் வேலைவாய்ப்பின்மை உருவாக வாய்ப்புள்ளது. நாளை , பங்கு சந்தை பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் கணித்து உள்ளனர். நாளை பங்கு சந்தை வீழ்ச்சி பொருளாதார சரிவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications