Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.. ஜிடிபி சரிவிற்கு இடையில் அமைச்சர் நிர்மலா நம்பிக்கை!

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி... முன்பே எச்சரித்த அபிஜித் பானர்ஜி

    டெல்லி: இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு துறைகள் பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார சரிவு காரணமாக மக்கள் நேரடியாக பாதிக்க தொடங்கி உள்ளனர்.

    GDP: India will reach the 5 Trillion Dollar Economy says Nirmala Sitharaman amidst slowdown

    இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. '

    இந்த நிலையில் பொருளாதார மந்த நிலைக்கு இடையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் முதல் 6 மாத சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார். இதற்காக #6MonthsOfIndiaFirst என்ற டேக் இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் டிவிட் செய்திருந்த நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் ஆறு மாதம் முடிந்துள்ளது. இந்த ஆறு மாதத்தில் பல முக்கியமான வளர்ச்சி திட்டங்கள், மறுமலர்ச்சி நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம்.

    முக்கியமாக பொருளாதார துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    மத்தியில் கார்ப்ரேட் வரிகளை குறைக்க வேண்டும் என்று அரசு எடுத்த நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. இதன் மூலம் புதிய முதலீடுகள் பெருக்கப்படும். நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா தொடும்.

    உலகிலேயே இந்தியாவில்தான் கார்ப்பரேட் வரி மிகவும் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+