தர்மேந்திர பிரதான் மகளை குறிவைத்து தாக்கும் ஜென்சி கிட்ஸ்.. இன்ஸ்டாவை விட்டே வெளியேறினார்
டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துவிட்டார். தற்போது டெல்லியில் உள்ள அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தில் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் நீட் பிரச்சனை காரணமாக ஜென்சி இளைஞர்கள் தர்மேந்திர பிரதானை அட்டாக் செய்து வருகிறார்கள். மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கும் போராட்டமே தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு தான். அந்த வகையில் தர்மேந்திர பிரதானுடன் சேர்த்து அவரது மகளையும் அட்டாக் செய்து வருகிறார்கள். இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து நிரந்தரமாக வெளியேறி உள்ளார்.
இந்தியாவில் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு லீக் ஆனதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒருமுறை அல்ல. இதுவரை மூன்று முறை நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுதேர்வு வைத்து, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் நீட் தேர்வு லீக் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள், பொங்கி எழுந்தனர்.

அவர்கள் அரசாங்கத்தை நோக்கி கடுமையான முறையில் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். தலைநகர் டெல்லியில் ஜென்சி மாணவர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அவர்கள் இலக்கு ஒன்று தான். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும். அதுதான் அவர்களது இலக்கு. மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. ஆனால் மாணவர்கள் விடுவதாக இல்லை. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாமல் நாங்கள் ஓய மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
டெல்லியில் நடக்கும் இந்த போராட்டத்தை மொத்த இந்தியாவும் கவனித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மத்திய அரசு ஏதாவது சிறு தவறு செய்தாலும் மொத்த இந்தியாவிலும் மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் பரவும் ஆபத்து உள்ளதால், சிக்கலான நிலையை அரசு கவனமாக கையாண்டு வருகிறது.
இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் லட்சக்கண்ககான மாணவர்களின் டார்க்கெட் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பதை தாண்டி, அவரது மகளையும் விமர்சிக்க தொடங்கினார்கள். பல லட்சம் மாணவர்கள் போட்டி தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உயர்கல்வி அமைச்சரின் மகள் அமெரிக்காவில் உள்ள உயர்தர டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார் என்பதை கேள்விப்பட்டு கடுமையாக விமர்சிக்கிறார்கள்
அவர்களின் கோபத்திற்கு காரணம், "நாட்டின் கல்வி முறையைத் தீர்மானிப்பவர், தன் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறாரே" என்பது தான். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். தற்போது டெல்லியில் உள்ள அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தில் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான், இந்தியாவின் கல்வி முறையை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார். ஆனால் தனது மகளுக்கு மட்டும் பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த கல்வியை அமெரிக்காவில் கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறாரகள். இதன் தொடர்ச்சியாக, நைமிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கைக் கண்டுபிடித்து, அவரது பதிவுகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான கண்டனக் கருத்துக்களைப் ஜென்சி கிட்ஸ் பதிவிட்டு வந்தார்கள். இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளக் கணக்கை முழுமையாக நீக்கி வெளியேறியுள்ளார்.
இந்தியாவின் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் எடுத்த முடிவுகளுக்காக அவரது கொள்கையை விமர்சிக்க மக்களுக்கு முழு உரிமை உண்டு. அவரது செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிக்கவும் நிச்சயம் உரிமை உண்டு. ஆனால் அவரது முடிவுகளுக்காக, அவரது பிள்ளையை சமூக வலைத்தளங்களில் 'சைபர் புல்லிங்' செய்வதும், தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதும் முற்றிலும் தவறானது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், தர்மேந்திர பிரதான் அவர்களின் குடும்பத்தினரை, குறிப்பாக அவரது மகளைக் குறிவைப்பது முறையான செயல் அல்ல. அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல; எனவே, அவர்களை இதில் இழுக்கக்கூடாது. கல்வி அமைச்சரின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பவும், அதற்காக அவரைப் பொறுப்பேற்கச் செய்யவும் மக்களுக்கு முழு உரிமை உண்டு. தலைவரை விமர்சியுங்கள், குடும்பத்தையல்ல." இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
