லடாக்கில் Gen Z இளைஞர்களின் கிளர்ச்சி! போராட்டம்.. வன்முறை.. துப்பாக்கிச்சூடு! என்னதான் நடக்கிறது?
ஸ்ரீநகர்: லடாக்கில் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் ஏன்? கடந்த 2 வாரங்களாக அமைதியாக நடந்த போராட்டம், நேற்று திடீரென வன்முறையாக வெடித்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து (370 வது சட்டப்பிரிவு) மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி லடாக்கிற்கு சட்டமன்றம் கிடையாது. எனவே லடாக் பகுதி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

போராட்டத்தில் இணைந்த அமைப்புகள்
தொடக்கத்தில் இந்த அறிவிப்பை உள்ளூர் பிரபலங்கள் சிலர் வரவேற்றாலும், பின்னர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். லடாக் பகுதியில் புத்த மதத்தை பின்பற்றும் மத குழுக்கள் 'ஏபிஏ' என்று ஒரு பிரிவினரும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பிரிவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 'கேடிஏ' என மற்றொரு பிரிவினரும் இணைந்து லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இவர் பெரும்பாலும் இணைந்து செயல்படுவது கிடையாது. இருப்பினும் இந்த போராட்டத்தில் அவர்கள் இணைந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அமித்ஷாவை சந்தித்த மக்கள்
மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த நிலையில் அதனை பரிசீலிக்க மத்திய அரசு ஒரு உயர்நிலை குழுவை அமைத்தது. இந்தக் குழு உள்ளூர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே கடந்த மார்ச் மாதம் லடாக் உள்ளூர் மக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட குழு மற்றும் அதன் நடவடிக்கையில் எந்த பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து அல்லது இந்திய அரசியல் அமைப்பு அட்டவணை 6ல் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்க வேண்டும் என்றும் அந்த குழு அமித்ஷாவிடம் வலியுறுத்தியது.
போராட்டத்திற்கான புள்ளி
ஆனால் தங்கள் கோரிக்கைகளை அமித்ஷா நிராகரித்து விட்டதாக அக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த புள்ளியில் இருந்துதான் லடாக்கில் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கின. மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரத போராட்டத்தை பிரபல சூழலியல் ஆர்வலர் வாங்சுக் மற்றும் அவருடன் சேர்ந்து 14 பேர் முன்னெடுத்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பற்றிய போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், உண்ணாவிரதம் இருந்த தலைவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், இளைஞர்களின் போராட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட இரு அமைப்புகளும் அழைப்பு விடுத்தன. போராட்டம் நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட காவல்துறை, உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து பேரணியையும் போராட்டத்தையும் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு இன்னொரு காரணம் மத்திய அரசு அக்டோபர் 6ம் தேதி, பேச்சு வார்த்தைக்கு தேதி குறித்ததுதான். கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி, தலைவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத மத்திய அரசு, சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது என்று தங்களது அதிருப்தியை போராட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் வெளிப்படுத்தியிருந்தன.
போராட்டமும் வன்முறையும்
நேற்று காலை 11.30 மணியளவில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். போராட்டக்காரர்கள், காவலர்களையும் பாஜகவின் அலுவலகத்தையும், ஹில் கவுன்சில் அலுவலகத்தையும் தாக்கி அரசு வாகனங்களுக்கு தீ வைத்தனர் என்றும் அவர்களை கட்டுப்படுத்த நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போது, அவர்கள் கற்களை வீசி தாக்கினார்கள் என்றும் போலீசார் கூறியிருந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டது துரதிஷ்டவசமானது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
யூனியன் பிரதேசமாக லடாக் மாற்றப்பட்டதால் வேலைவாய்ப்புகள், நிலத்தின் மீதான உரிமை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை குறைந்து வருவதாக மக்கள் உணர்கின்றனர். அதேபோல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் எதுவும் உள்ளூர் மக்களால் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் லடாக்கின் தனித்துவமான சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும் போராட்ட குழுவினர் கூறியிருக்கிறார்கள். எனவே லடாக்கிற்கு உடனடியாக மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
மத்திய அரசின் குற்றச்சாட்டு
கடந்த இரண்டு வாரங்களாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக வைத்தது ஏன் என்று மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்த வன்முறைக்கு காரணம் தூண்டுதல் பேச்சுக்கள்தான் என்றும், நேபாளத்தில் Gen Z போராட்டங்கள் பாணியில் இளைஞர்கள் இங்கு தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. வன்முறை வெடித்த போது அதை வெறுமன கண்டித்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் சென்று விட்டார் என்றும் உள்துறை அமைச்சகம் சாடியிருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள வாங்சுக், நேற்று நடந்த வன்முறைக்கு காரணம் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜக அளித்த வாக்குறுதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். "இளைஞர்களுக்கு நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருக்கிறது. வாழ்க்கை தரம் மோசமாகி கொண்டு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் அமைதியை பின்பற்றி, மகாத்மா காந்தியின் பாதையில் பயணித்தோம். ஆனால் நேற்று முற்றிலும் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. இளைஞர்கள் வீதிக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டனர்" என்று இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அடுத்து என்ன நடக்கும்
தற்போது லடாக் பகுதியில் அமைதி நிலை திரும்பி இருந்தாலும் மீண்டும் போராட்டங்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அக்டோபர் 6ம் தேதி உயர் அதிகாரிகளின் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில் லடாக் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்றும், நாளையும் லடாக் தலைவர்களுடன் கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட போது, உள்ளூர் மக்கள் அதை கொண்டாடினார்கள். ஆனால், இன்று அதை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!











Click it and Unblock the Notifications