இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! வெளிநாடு போவது ஈஸி! ஜெர்மனி அதிபர் சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க
இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் இந்திய ஐடி ஊழியர்களை உற்சாகப்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்தார்.
டெல்லி: உலகின் முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றான ஜெர்மனி இப்போது பல துறைகளில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஐடி ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றைக்குறையை நீக்க இந்திய ஐடி ஊழியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாக ஜெர்மனி இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் ஜெர்மனி தான் முன்னணியில் இருக்கிறது. இருந்த போதிலும், சில காலமாக அங்குத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது பெரிய பிரச்சினையாக மாறினால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இப்போதே இதைச் சமாளிக்க ஜெர்மனி அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது

ஜெர்மனி
ஜெர்மனியில் இப்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க அங்குள்ள ஓலாஃப் ஸ்கோல்ஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் குடியேற இருக்கும் தடைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வேலை வாய்ப்பு இல்லாத போதும் வல்லுநர்களுக்கு விசா வழங்கப் புள்ளிகளை வழங்கும் முறையையும் அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

ஜாக்பாட் நியூஸ்
இதனிடையே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஓலாஃப் ஸ்கோல்ஸ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் ஜெர்மனிக்கு வந்து வேலை செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இந்திய ஐடி ஊழியர்களை ஈர்க்க ஜெர்மனி அரசு எதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

முக்கிய தகவல்
நேற்று பெங்களூரில் ஐடி வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓலாஃப் ஸ்கோல்ஸ் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெர்மனியில் திறமையான தொழிலாளர்களாக பணிபுரியும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இங்குள்ள பலரும் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து துறைகளிலும் பணிபுரிய எங்களுக்கு ஆட்கள் தேவை, குறிப்பாக ஐடி மற்றும் மென்பொருள் துறையில் அதிகப்படியான ஊழியர்கள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.

ஐடி வல்லுநர்கள்
மேலும் அவர் கூறுகையில், "ஐடி உள்ளிட்ட பிரிவில் இருக்கும் ஊழியர்கள் ஜெர்மனியில் குடியேற இருக்கும் தடைகளைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு துறையில் வல்லுநராக இருந்தால்.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஜெர்மனி வந்து பணியாற்றும் வழிமுறைகளை எளிமையாக்கப்படும். ஜெர்மனியில் வேலை கிடைக்கும் முன்னரே, துறையில் வல்லுநராக இருப்பவர்கள் ஜெர்மனி வர விசா கோரி விண்ணப்பிக்க புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

இறுதிக்கட்ட பணிகள்
இதற்கான கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகளில் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். கனடா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைப் போலப் புள்ளிகள் அடிப்படையிலான சிஸ்டத்தை உருவாக்குகிறோம். ஜெர்மனி வர விரும்புவோருக்கு ஜெர்மனி மொழி தெரிந்திருந்தால்.. அது கூடுதல் அட்வான்டேஜாக கருதப்படும்" என்று அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதுடன், உக்ரைன் போர் குறித்தும் ஜெர்மனி அதிபரின் இந்த பயணத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜெர்மனி அதிபர்
ஜெர்மனி அதிபருடன் பல தொழிலதிபர்களும் இந்தியா வந்திருந்தனர். இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுப்பேன் என்றும் ஜெர்மனி அதிபர் உறுதியாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை குறித்தும் இரு தரப்பும் விவாதித்தனர். இந்தியா தனது கடல் படையை நவீனமாக்க ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பது தொடர்பாகவும் இரு தரப்பும் ஆலோசித்தனர்.












Click it and Unblock the Notifications