இந்தியர்களுக்கு குஷி அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி.. இனி பிரச்சனையே இருக்காது.. யாருமே எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு பக்கம் அமெரிக்கா விசா நடவடிக்கைகளில் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், ஜெர்மனி இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இருந்த பெரிய சிக்கல் நீங்கும்!

சமீப காலமாகவே இந்தியாவுக்கான விசா கெடுபிடிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியர்கள் விசாவுக்காக பல காலம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் கூட நூற்றுக்கணக்கானோரின் ஹெச்-1பி விசா நேர்காணல் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

Germany Announces Visa-Free Transit for Indian Passport Holders During PM Modi-Chancellor Merz Talks

இந்தியர்கள்

இதனால் இந்தியர்கள் பலரும் ஐரோப்பிய நாடுகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஜெர்மனி வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் இனி ஜெர்மனி செல்ல விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசா தேவையில்லை

அதாவது ஜெர்மனி நாட்டின் வழியாக பிறகு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வோர் இதுவரை டிரான்ஸிட் விசா எடுக்க வேண்டி இருந்தது. வெறும் சில மணி நேரம், அதிலும் ஜெர்மனி விமான நிலையத்திற்குள் இருக்கவே தனியாக விசா எடுக்க வேண்டும் என்பது தேவையில்லாத ஒரு சிக்கலாகவே இருந்தது. இதனால் இந்தியர்கள் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தனர். இந்தச் சூழலில் தான் இந்தியர்களின் ஐரோப்பிய பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனி அதிபர்

ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இப்போது இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு மெர்ஸ் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். மேலும், மெர்ஸ் ஆசியாவுக்கு வருவதும் இதுவே முதல்முறை. இதனால் அவரது இந்தியப் பயணத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில் தான் விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புக்காகப் பிரதமர் நரேந்திர மோடி சான்ஸ்லர் மெர்ஸுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து இரு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த நடவடிக்கை இந்தியர்களின் பயணத்தை எளிதாக்குவதுடன், மக்கள் தொடர்புகள் வலுப்படும். வலுவான மக்கள் தொடர்புகள் தான் இரு நாடுகளின் உறவில் முக்கிய தூண்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜெர்மனி நாடுகளுக்கு இடையே மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திறமையானோர், கலைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் வளர்ந்து வருவதை இரு தரப்பினரும் வரவேற்றனர்.

கவனிக்க வேண்டியது

இந்த விசா அறிவிப்பில் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது ஜெர்மனி விமான நிலையம் வழியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வோருக்கான டிரான்ஸிட் விசா மட்டுமே தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டை சுற்றிப் பார்க்கச் செல்வோர் ஷெங்கன் விசா (Schengen Visa) எடுக்க வேண்டும். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்த ஷெங்கன் விசா எடுத்தால் ஜெர்மனி மட்டுமின்றி 29 ஐரோப்பிய நாடுகளுக்கு 90 நாட்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றிப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+