"டோட்டலா மாறுதே".. புதுசு கண்ணா புசுது.. இன்னும் 8 நகரங்களா? மத்திய சூப்பர் அதிரடி..காரணம் தெரியுமா?
டெல்லி: மத்திய அரசு விரைவில் 8 புதிய நகரங்களை உருவாக்க போகிறதாம்.. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் "நகர்புறங்கள்-20" என்ற ஜி20 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டு துறை பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்ற, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டுத் துறைக்கான ஜி20 பிரிவின் இயக்குநர் எம்.பி.சிங் பேசும்போது, "மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் நகரங்கள் உள்ளன. புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எதிர் பாராத வளர்ச்சி, நகரத்தின் அடிப்படை கட்டமைப்புத் திட்டத்தைப் பாதிப்பதாக உள்ளது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத முடியாத நகரங்கள் உள்ளன.. புகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி, நகரத்தின் அடிப்படை கட்டமைப்பு திட்டத்தை பாதிப்பதாக உள்ளது. நாட்டில் புதிய நகரங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 15-வது நிதி ஆணையத்தின் அறிக்கை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் பரிந்துரைக்குப் பிறகு 26 புதிய நகரங்களுக்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு மாநிலங்கள் அனுப்பியுள்ளன. மாநில அரசுகள் அனுப்பியுள்ள இந்த 26 புதிய நகரங்கள் குறித்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு, அவற்றில் 8 நகரங்களை மேம்படுத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த முக்கிய நகரங்கள் தொழில், வர்த்தகம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும்.

இந்த 8 நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான கால அளவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். புதிய நகரங்கள் உருவாகும் போது, 200 கிமீ சுற்றளவு பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் முன்னேற்றம் அடையும் ள
இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. எனவே, இந்த 8 புதிய நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான கால அளவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications