Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேசப் புகைப்படப் போட்டி 2026: முதல் பரிசாக ₹5 லட்சம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞர்களுக்கான குளோபல் எபிலிட்டி ஃபோட்டோகிராபி சேலஞ்ச் 2026 ஐந்தாவது பதிப்பை NotJustArt மற்றும் Adani GreenXTalks இணைந்து அறிவித்துள்ளன. இது ஓர் உலகளாவிய போட்டியாகும்.

Youth4Jobs அறக்கட்டளையின் ஒரு அங்கமான NotJustArt மற்றும் அதானி கிரீன் எக்ஸ்டாக்ஸ் (Adani GreenXTalks) இணைந்து இதனை நடத்துகின்றன.உலகம் முழுவதிலும் உள்ள தொழில்முறை மற்றும் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் கிடையாது.

மிகப்பெரிய போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான புகைப்படப் போட்டிகளில் இது மிகப்பெரியது. இந்த தளம் இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50,000-க்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஜப்பான், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் போட்டியில் இடம்பெற்ற புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நோக்கம் இதுதான்

இந்த போட்டி தொழில்முறை மற்றும் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞர்களை, அவர்களின் தனித்துவமான அனுபவங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்தும் படைப்புகளைச் சமர்ப்பிக்க அழைக்கிறது. பல்வேறு வகையான கதைகளை மக்களுக்குக் கொண்டு சென்று, கலை உலகில் அனைவரும் சமமாகப் பங்கேற்கும் ஒரு நல்ல சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்.

சிற்பான பங்களிப்பு

Youth4Jobs அறக்கட்டளையின் நிறுவனர் மீரா ஷெனாய் கூறுகையில், "சரியான வாய்ப்பு கிடைத்தால், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இந்தப் போட்டி ஒரு சான்று. கடந்த கால வெற்றியாளர்கள் பல சவால்களை வென்று தங்கள் துறைகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர்," என்றார்.

படைப்புத்திறன் மிக்க ஒரு ஊடகம்

அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் இயக்குநர் ஜீத் அதானி, "மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். புகைப்படம் என்பது உலகளாவிய, படைப்புத்திறன் மிக்க ஒரு ஊடகம். இது சக்திவாய்ந்த கதைகளைச் சொல்லவும், எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கவும் உதவும்," என்று தெரிவித்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்

இந்தப் போட்டி சிறந்த திறமைகளைப் பாராட்டும் விதமாக, பெரிய அளவில் பணப் பரிசுகளை வழங்குகிறது. முதல் பரிசு ₹5 லட்சம், இரண்டாம் பரிசு ₹3 லட்சம், மூன்றாம் பரிசு ₹2 லட்சம். நான்காம் முதல் பத்தாம் இடம் வரையிலான வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கும்.

பணப் பரிசுகளுடன், முதல் 20 சிறந்த படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படும். முதல் 10 வெற்றியாளர்களுக்கு, உலக அளவில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மைக்கேல் ஃபோலி வடிவமைத்த சிறப்பு கோப்பைகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Youth4Jobs அறக்கட்டளை

பரிசு வழங்கும் விழா மற்றும் கண்காட்சி 2026 ஜூன் 24 அன்று அகமதாபாத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் இந்திய வெற்றியாளர்கள் மற்றும் ஒரு சர்வதேசப் பங்கேற்பாளரின் பயண, தங்கும் செலவுகளை நிறுவனம் ஏற்கும். மேலும், படைப்புகள் பல்வேறு ஊடகங்களிலும், சர்வதேச விளம்பரங்களிலும் இடம்பெறும்.

Youth4Jobs அறக்கட்டளையின் ஒரு பகுதியான NotJustArt, மாற்றுத்திறனாளிகளிடையே கலைத் திறனை, குறிப்பாகப் புகைப்படக் கலையை வளர்த்து, அனைவரும் சமமாகப் பங்கேற்கும் ஒரு படைப்புச் சூழலை உருவாக்குகிறது. Youth4Jobs, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பாடுபடுகிறது.

"குளோபல் எபிலிட்டி ஃபோட்டோகிராபி சேலஞ்ச் 2026" போட்டிக்கு பதிவு செய்ய இப்போது வாய்ப்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞர்கள் இந்த அரிய உலகளாவிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+