பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும், இருப்பினும் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக சரிவடையவில்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
2014 முதல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க நாங்கள் விரும்பி செயல்படுகிறோம். அதே வேகம் தொடரும் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். உலகளவில் என்ன நடக்கிறது என்பதற்கான ஒரு படத்தை சுருக்கமாக உங்களுக்கு வழங்குவதற்காக உங்களை சந்தித்துள்ளேன். தற்போதைய உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சுமார் 3.2% மட்டுமே ஆகும். இது மேலும் கீழ்நோக்கி போக வாய்ப்பு உள்ளது.

பல அமைப்புகள், உலக அளவில் தேவை (Demand) மிகவும் பலவீனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது. மெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நிலை நன்றாகவே உள்ளது.
இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம். எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம்.
விஜய தசமி நாளிலிருந்து வரித் துறையில் முகமற்ற ஆய்வு (faceless scrutiny) அதாவது முழுக்க கணினி மயமாக இருக்கும். வழக்குத் தொடுப்பதை விட அபராதம் வசூலிப்பதே சிறந்தது என்பது அரசின் முன்னுரிமையாக இருக்கும்.
ஜிஎஸ்டி தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களுக்கு விரைவான மற்றும் எளிதான ஒப்புதல்கள் வழங்கப்படும்.
கார்பொரேட் சமூக பொறுப்பு (சிஆர்எஸ்) மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படக்கூடாது, அதற்கு பதிலாக சிவில் பிரச்சினையாகவே கருதப்படும்.
மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, நிதித்துறை விதித்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற (No. 2) Act, 2019 முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன லாபம் மீதான கூடுதல் வரி விதிப்பு கிடையாது.
ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், உடனடியாக, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான கடன் மீதான வட்டியும் இனிமேல் குறையும். வங்கிகள் அந்த லாபத்தை தக்க வைக்க முடியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications