காம்ப்ரமைசே கிடையாது.. கைலாசம் கம்பல்சரியா வரும்.. இவர் வேற குறுக்க குறுக்க வந்துக்கிட்டு!
டெல்லி: கைலாசம் தனிநாட்டை உருவாக்குவது நிச்சயம் என்றும் இதில் சமரசமே கிடையாது என்றும் நித்யானந்தா புதிய வீடியோவில் பகீர் சவால் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகில் எந்த மூலையில் இருக்கிறார் என தெரியாமல் அன்றாடம் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நித்யானந்தா கூறுகையில் 2003-ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை.
என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி. ஆன்மிகத் துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜாலி
கைலாசாவை அமைத்தே தீருவேன். இதில் சமரசமே கிடையாது. கைலாசாவை நிச்சயம் உருவாக்குவேன். பரமசிவனின் உத்தரவின் பேரில் பார்வதி தேவியின் ஆசியுடன் இந்த கைலாசா உருவாகும். என்னை பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை. மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். நானும் ஜாலியாக இருக்கிறேன் என பேசினார்.

40 லட்சம்
கடந்த வாரம் 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்த நித்தி, இந்த வாரம் 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாக கூறியுள்ளார். கைலாசா, மீனாட்சி மீனாட்சி என அவ்வப்போது அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நித்யானந்தா.

நித்தி எங்கே
நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா ஐகோர்ட்டு பெங்களூரு போலீசாருக்கு விதித்த கெடு நாளையுடன் (18-ஆம் தேதி) முடிவடைகிறது. இது வரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

வீடியோ
நித்யானந்தா சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்களை ஆய்வு செய்ததில் அவர் அமெரிக்காவில் ஒரு தீவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வீடியோவில் போலீஸாரையும் நித்யானந்தா கிண்டல் செய்து பேசுகிறார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications