ஒரே நாளில் சட்டென ரூ.16 ஆயிரம் குறைந்த தங்கம் விலை.. நகை கடைகளில் மக்கள் வெள்ளம்! நேபாளத்தில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தங்கம் விலை அதிரடியாக ரூபாய் 16 ஆயிரம் குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை பாதியாக குறைத்ததன் காரணமாக, அங்கு தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் மக்கள், நகைக்கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இன்று நேபாளத்தில், 24 காரட் தங்கம் 10 கிராம் இந்திய ரூபாயில் 71 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதேசமயம் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் இன்றைய விலை 74,450. இந்தியாவை விட சுமார் 3,500 ரூபாய் நேபாளத்தில் தங்கம் விலை குறைவாக உள்ளது.

gold rate nepal gold

தங்கம் விலை: கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்தது. சவரன் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 6,000 அளவுக்கு தங்கம் விலை குறைந்தது.

இந்த நிலையில், நேபாள அரசும் தற்போது இதேபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. நேபாள அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை சரிபாதியாகக் குறைத்துள்ளது. அதாவது நேபாள அரசு தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கத்தின் விலை தோலா ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் குறைந்துள்ளது.

ஒரு தோலா தங்கம்: இந்தியாவில் தங்கம் சவரன் (பவுன்) என அளவிடப்படுவதைப் போல, நேபாளத்தில் தோலா என குறிப்பிடப்படுகிறது. ஒரு தோலா தங்கம் என்பது 11.7 கிராம். நேபாளத்தில் ஹால்மார்க் தங்கத்தின் விலை கடந்த ஞாயிற்றுக்கிழமை தோலா ஒன்றுக்கு ரூ.1,67,200 என விற்பனையான நிலையில், திங்கட்கிழமை ஒரு தோலா தங்கம் ரூபாய் 1,51,300 ஆக குறைந்தது.

நேபாள அரசு சுங்க வரியை பாதியாக குறைத்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை ஒரு தோலா ரூ.15,900 குறைந்துள்ளது. இந்தியா கடந்த ஜூலை மாதம் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்த பிறகு, இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்தது. அதேசமயம், நேபாள நாட்டில் பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டதால் அங்கு தங்கம் விலை உயர்ந்தது.

நேபாளத்தில் சுங்க வரி குறைப்பு: நேபாளத்தில் சுங்க வரி அதிகரிப்பால், தங்கம் விலை உயர்ந்ததால், தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என உள்நாட்டு தங்க வியாபாரிகள், சுங்க வரி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என நேபாள அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், விலை உயர்வு காரணமாக தங்கக் கடத்தல் அதிகரித்தது. அருகருகே இருக்கும் நாடுகளில் சுங்க வரிகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதன் காரணமாக சட்டவிரோத வர்த்தகம் அதிகரித்தது. அதனை தடுக்க, தங்கத்தின் மீதான சுங்க வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நகை கடைகளில் கூட்டம்: இதைத்தொடர்ந்து ஒரு தோலா தங்கம் 16 ஆயிரம் என்ற அளவில் குறைந்தது. 2 நாட்களில் மேலும் 2,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி நேபாளத்தில் ஒரு தோலா ஹால்மார்க் தங்கம், ரூ. 1,49,299க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைவால், மக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா - நேபாளத்தில் தங்கம் விலை ஒப்பீடு: நேபாளத்தில், 24 காரட் தங்கம் 10 கிராம் 114,710 நேபாள ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 10 கிராம் தங்கம் 71 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதேசமயம் இந்தியாவில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் இன்றைய விலை 74,450. ஆக, இந்தியாவை விட சுமார் 3,500 ரூபாய் நேபாளத்தில் தங்கம் விலை குறைவு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+