ஒரு நிமிஷம் நில்லுங்க..தங்கம் வாங்க போறீங்களா? கன் மாதிரி கம்பீரமா நிக்குது டாலர்? இனிதான் ட்விஸ்ட்!
டெல்லி: சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. வலுவான அமெரிக்க டாலர் மற்றும் உலகளாவிய பணவியல் கொள்கை தொடர்பான நிச்சமற்ற நிலை காரணமாக மதிப்புமிக்க உலோகங்களின் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் வரும் காலங்களில் இந்த போக்கே தொடரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்..
சராஃபா சங்கத்தின் தகவலின்படி, வெள்ளி விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு ரூ.2,76,500 ஆக இருந்த வெள்ளி விலை ரூ.11,000 குறைந்து ரூ.2,65,500 ஆக பதிவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 99.9 சதவீத தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2,000 வரை குறைந்து ரூ.1,63,200 ஆக வந்துள்ளது. முந்தைய வர்த்தக நாளில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,65,200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தை நிலை
சர்வதேச சந்தையிலும் விலை மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. உலக சந்தையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 1 சதவீதம் குறைந்து 83.1 டாலராக இருந்தது. அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு சுமார் 5,088 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் உயர்வு கண்ட தங்கம், இந்த வாரத்தில் சுமார் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எம்சிஎக்ஸ் சந்தையிலும் சரிவு
இந்தியாவின் பல்துறை பொருட்கள் வர்த்தக மையத்தில் (MCX) வெள்ளி மற்றும் தங்கத்தின் எதிர்கால ஒப்பந்தங்களிலும் விலை குறைவு பதிவாகியுள்ளது. 2026 மே மாத டெலிவரிக்கான வெள்ளி ஒப்பந்தம் கிலோவுக்கு ரூ.1,961 குறைந்து ரூ.2,66,001 ஆக இருந்தது. அதேபோல் 2026 ஏப்ரல் மாத டெலிவரிக்கான தங்க ஒப்பந்தம் 10 கிராமுக்கு ரூ.507 குறைந்து ரூ.1,59,764 ஆக இருந்தது.
விலை குறைவுக்கான காரணம்
எரிசக்தி விலைகள் அதிகரித்திருப்பதால் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உடனடியாக இருக்காது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் இருந்து ஓரளவு விலகியுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், உலகளவில் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தொடர்வதும், கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதும் தங்கத்தின் மீது உள்ள பாதுகாப்பு முதலீட்டு தேவையை ஓரளவு குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனம்
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான தனிநபர் நுகர்வு செலவு குறியீட்டு (PCE) தரவுகள் வெளியாகவுள்ளன. இந்த தரவுகள் வெளியான பிறகு தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உலக பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் போக்கை தீர்மானிக்கக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக சந்தையை கண்காணித்து வருகின்றனர்.
என்ன செய்யலாம்?
தற்போதைய சூழலில் ஒட்டுமொத்தமாக தங்கத்தை வாங்கி குவிப்பதை தவிர்த்து பகுதி பகுதியாக முதலீடு செய்வதே நலம் பயக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் சேமிப்பு மற்றும் குடும்ப முதலீடாக தங்கத்தை நினைப்பவர்கள் தேவையானவற்றை குறிப்பிட்டு அளவில் வாங்கி வைக்கலாம் எனவும் சொல்கின்றனர். வரும் காலங்களில் தங்கத்தின் விலை சரிய வாய்ப்பு இல்லை என்றும், ஆனால் முதலீட்டு நோக்கத்தோடு தங்கம் முதலீடு செய்ப நினைப்பவர்கள் பொறுத்து இருக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்கின்றனர்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications