டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்ட்ராய்டு போன்களில் இனி கால் ரெக்கார்டிங் செயலி இன்று முதல் செயல்படாது! கூகுள் அதிரடி.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்ட்ராய்டு இயங்குதளம் மூலம் செயல்படும் ஸ்மார்ட் போன்களில் அழைப்புகளை ரெக்கார்டு செய்யும் செயலியை கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளது.

ஆன்ட்ராய்டு பயனாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்த கால் ரெக்கார்டர் ஆப்ஷன் மூலம் தங்கள் போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாம் தரப்பு அதாவது third party கால் ரெக்கார்டிங்கை கூகுள் தடை செய்துள்ளது.

இனி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்ஷன்களும் இன்று முதல் தடை செய்யப்படுகிறது. அதே போல் தற்போது போன்களில் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள இது போன்ற அப்ளிகேஷன்கள வேலை செய்யாது.

மக்களே மறந்துடாதீங்க.. இன்றிலிருந்து பழைய ஆன்ட்ராய்டு வெர்சனில் வாட்ஸ் ஆப் வொர்க் ஆகாது! மக்களே மறந்துடாதீங்க.. இன்றிலிருந்து பழைய ஆன்ட்ராய்டு வெர்சனில் வாட்ஸ் ஆப் வொர்க் ஆகாது!

பயனாளிகள்

பயனாளிகள்

எனவே இனி பயனாளிகள் தங்களின் போனில் உள்ள பில்ட் இன் கால் ரெக்கார்டிங் ஆப்ஷனை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு வேளை போனில் பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதி இல்லை என்றால் இனி இன்று முதல் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. அது போல் ட்ரூ காலர் போன்ற கால் ரெக்கார்டிங் செய்யும் செயலிகளும் ஆன்ட்ராய்டு மொபைல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கால் ரெக்கார்டிங்

கால் ரெக்கார்டிங்

இது போன்ற செயலிகள் கால் ரெக்கார்டிங் வசதிக்கு பயன்படுத்தும் அதே வேளையில் செல்போன்களின் ஏபிஐ தரவுகளை இவை டிராக் செய்கின்றன. இதன் மூலம் பயனாளர்களின் ப்ரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு கேள்விகுறியாகின்றன. இந்த செயலிகளை பலர் மிஸ்யூஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தடை

தடை

இதனால் கூகுள் நிறுவனம் கால் ரெக்கார்டிங்கிற்கு தடை செய்ததாக கூறியுள்ளார்கள். சாம்சங்க், ஒன் பிளஸ், ஒப்போ, ஜியோமி உள்ளிட்ட பிராண்டு போன்களில் பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதிகள் உள்ளன. இந்த பிராண்ட் போன்களில் ரெக்கார்டிங் வசதி இன்று முதல் சிக்கலின்றி செயல்படும்.

விவோ போன்கள்

விவோ போன்கள்

விவோ எனும் பிராண்ட் போன்கள் என்றால் அதில் ஃபன்டச் எனும் இயங்குதளம் மூலம் இயங்குவதால் இந்த போன்களில் ரெக்கார்டு ஆப்ஷன் இயங்கும். ரியல் மீ பிராண்ட் போன்களில் ரியல்மீயூஐவெர்சனை கொண்டு இயங்குவதால் பயனாளிகள் கால் ரெக்கார்டிங் பங்ஷனை எளிதாக எனேபிள் செய்வோ டிசேபிள் செய்வதோ முடியும்.

English summary
Google is blocking all call recorder app from today for privacy of users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X