இந்தியா வளர்ந்த நாடாக 2047 வரை பொறுத்திருங்கள்.. பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2047 ஆம் ஆண்டில் நனவாகும் என்று கூறினார்.

மத்தியில் பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தற்போது 10-வது ஆண்டாக ஆட்சியில் உள்ளது. அதன்படி, மத்திய பாஜக அரசு இன்று தனது 10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இரண்டாவது ஐந்தாண்டில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜட் இது ஆகும். தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Government aims to make the country by 2047, Nirmala Sitharaman

தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் பட்ஜெட் என்பதால் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. முழு பட்ஜெட் என்பது தேர்தலுக்கு பிறகு வரும் அரசே தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் 2024 இடைக்கால பட்ஜெட் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளது. பொதுவாக பட்ஜெட் என்றாலே வருமான வரி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மே அல்லது ஜூனில் தான் புதிய அரசு அமையும் என்பதால் அதுவரைக்குமான காலத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள், வருமான வரி விகிதங்கள் குறைப்பு, வரி சலுகைகள் அதிகரிப்பு, பிரிவு 80-C வரம்பு உயர்த்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட்டது.

கடன் தள்ளுபடி இருக்குமா? விவசாயிகள் எதிர்பார்த்தனர். இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2047-ல் நனவாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " 25 கோடி பேர் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

வறுமையில் இருந்து மக்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முன்நடவடிக்கைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1.1 கோடி இந்தியர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெற்று இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2047 ஆம் ஆண்டில் நனவாகும்" இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+