எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஐபோன்களில் ஹேக்கிங் முயற்சியா? நடந்தது இதுதான்.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் உளவு பார்க்க முயற்சித்ததாக ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து எச்சரிக்கை நோடிபிகிஷேன் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஐபோன்களுக்கு அலார்ட் சென்றது. இது குறித்து மத்திய அரசு தனது விளக்கத்தை அளித்துள்ளது.

சர்வதேச அளவில் மிக புகழ்பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதிகளோடு, பிரைவேசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

government order detail investigation cooperate with inquries Centre On Oppositions Hacking Attempt Charge

பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும். இதனால், பெரும்பாலும் ஹேக்கர்களும் ஆப்பிள் போன்களை குறிவைத்தே ஹேக்கிங் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு திடீரென ஹேக்கர்கள் டார்கெட் செய்வதாக ஒரு அலார்ட் வந்துள்ளது.

ஹேக்கிங் முயற்சி: காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்கள், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை அலார்ட் வந்துள்ளதாக அது பற்றிய ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளனர். அந்த அலார்ட்டில், அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எம்.பிக்கள் மட்டுமன்றி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேருக்கும் இதேபோன்ற அலார்ட் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மஹுவா மொய்த்ரா வெளியிட்டு உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் [email protected] என்ற ஈ மெயில் முகவரி மூலம் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பது தெரிகிறது. சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் இதை பகிர்ந்து, "உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு. இது குறித்து விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசு விளக்கம்: அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்கள் ஹேக்கிங் செய்ய முயற்சிப்பதாக தங்கள் செல்போனுக்கு மெசேஜ் வந்ததாகவும் அது குறித்த ஸ்கிரீன் ஷாட்டையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பகிர்ந்து இருந்தது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு தனது விளக்கத்தை அளித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:-

150 நாடுகளில்: விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எச்சரிக்கை மெசேஜ் வந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த அலார்ட் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 150 நாடுகளில் இதுபோன்ற நோடிபிகேஷன் சென்றுள்ளது.

government order detail investigation cooperate with inquries Centre On Oppositions Hacking Attempt Charge

பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹூவா மொய்தரா ஆகியோர் பிரதமர் மோடியை விமர்சித்தே ஆக வேண்டும் என விமர்சிப்பவர்கள். நாட்டின் வளர்ச்சியை இவர்கள் அனைவரும் பார்க்க விரும்பாதவர்கள். இது போன்று விமர்சிப்பர்வர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை செய்வது இல்லை. பெரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்றால், இது போன்ற பிரச்சினையை எழுப்புவார்கள்.

திசை திருப்ப விரும்புகிறார்கள்:பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மக்கள் முன்னேறுவதை திசை திருப்ப அவர்கள் விரும்புகிறார்கள்' என்றார். மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அஸ்வினி வைஸ்வனவ் இந்த தகவலை தெரிவித்தார். முன்னதாக இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறியிருப்பதாவது:-

அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வந்த நோட்டிபிகேஷனுக்கான காரணம் என்பது குறித்த தகவல்களை வழங்க முடியவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களின் போது மாட்டுவதில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+