“தேர்தல் பரிசு”.. பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு.. 663 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது.

Government slashes petrol diesel prices by Rs 2 per litre ahead of Lok sabha election

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டதால். சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றோடு 663-வது நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் அதே விலையில் விற்பனையாகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது.

Government slashes petrol diesel prices by Rs 2 per litre ahead of Lok sabha election

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.63-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கு விற்பனையாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.31- க்கும், டீசல் விலை ரூ.94.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இநிந்லையில், 2 ரூபாய் விலை குறைக்கப்படுவதன் மூலம் 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது. இன்று நள்ளிரவு முதல் சென்னையில், 100.63 ரூபாய்க்கு பெட்ரோல் மற்றும் 92.24 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+